Saturday, May 2, 2026
Huis Blog Bladsy 71

அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை – சாணக்கியன் அதிரடி

0

அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றுபதிலை வழங்கியிருந்தார்.

பிரதமர் தெரிவித்ததாவது,

உள்நாட்டு பொறிமுறை மாத்திரமே அனுமதிக்கப்படும் சர்வதேச பொறிமுறைக்கு அனுமதியில்லை இதனால் நாடு பிளவுபடும் எனக் கூறி இருந்தார்.

இது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய சாணக்கியன்,

பிரதமர் அளித்த பதிலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், பிரதமரே, உங்களின் ஆட்சிக் காலத்தின் சுமார் 20% ஏற்கனவே முடிந்து விட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.



அதாவது, ஒரு வருடம் கடந்து விட்டது. இப்போது, ஒரு வருடம் கடந்த நிலையில், நீங்கள் இந்த சபைக்கு கூறுவது என்னவெனில் அரசு உள்நாட்டு முறைமையைக் கொண்டு செல்ல விரும்புகிறது, சர்வதேச தலையீடுகளுக்கு அனுமதியில்லை என்கிறீர்கள், ஏனெனில் அது சமூகங்களைப் பிளக்கும் என்றும் நாட்டில் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் கூறுகிறீர்கள்.

அந்த கருத்துடன் நான் ஒப்புக் கொள்வதில்லை. உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் நம்பும், நம்பிக்கையுடன் ஈடுபடும் ஒரு செயல்முறை இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை நிராகரித்துள்ளீர்கள், மறுத்துள்ளீர்கள்.

இதன் பொருள், பாதிக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக, எனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறேன். இந்த அரசு குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலைக் கேட்டு சர்வதேச விசாரணைக்கு ஒப்புக் கொள்வார்கள் என நாங்கள் நம்பியிருந்தோம்.



எனினும், எனது நிலைப்பாடு தெளிவாகவே இருக்கிறது, நாங்கள் உங்கள் உள்நாட்டு முறைமையை நிராகரிக்கிறோம், மேலும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக நாங்கள் சர்வதேச விசாரணையையே கோருகிறோம், ஏனெனில் இலங்கையின் அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை. இது போர் முடிந்த 16 ஆண்டுகளாக எங்களின் நிலைப்பாடாகவே உள்ளது.

இப்போது, நீங்கள் குறிப்பிட்ட உள்நாட்டு முறைமைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன், பிரதமரே, உள்நாட்டு முறைமை நீதியாக சமமாக செயல்படும் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள், எப்போது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (Office of Missing Persons) இயங்குவதற்குத் தேவையான பணியாளர் எண்ணிக்கை 250-ஐ கடந்து இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குப் பிறகும், தற்போது 29 பேரே உள்ளனர்? இதுதான் உள்நாட்டு பொறிமுறையா?

நீதி அமைச்சரே, தயவுசெய்து நான் இவ் எண்ணிக்கையை பிழையாக கூறுகிறேன் என்று சொல்ல வேண்டாம், நீங்கள் உங்கள் அமைச்சகத்தில் சிறிது நேரம் செலவழித்து இந்த எண்ணிக்கைகள் மற்றும் தரவுகளைப் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது, காணாமல் போனவர்களின் அலுவலகத்தில் 59 இடங்களில் 13 பேர் மட்டுமே உள்ளனர். ஒதுக்கப்பட்ட 129 மில்லியனில், ஜூன் 30 ஆம் திகதியளவில் 36 மில்லியன் ரூபாயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரே, எமக்கான நீதி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு விடயம். நீங்கள் கூறும் இந்த உள்நாட்டு முயற்சிகள் எந்தளவு பயனளிக்கும்?



இலங்கை இழப்பீடு அலுவலகம் (Office of Reparations) பற்றியும் கவலை இருக்கிறது. 2009 இல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாக ரூ.200,000 வழங்க ஒப்பந்தம் இருந்தது. ஆனால் 253 குடும்பங்களுக்கு மட்டுமே சுமார் ரூ.60 மில்லியன் வழங்கப்பட்டது.

2022 இல் அமைச்சர் அலி சப்ரி ரூ.100,000 வழங்க முன்வந்தார், அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ரூ.200,000 ஆக உயர்த்தினார்கள், அதுவும் நிராகரிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டதில் ரூ.800 மில்லியன் மட்டுமே செலவழிக்கப்பட்டது.

2025 பட்ஜெட்டில் மீண்டும் ரூ.1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை ஒரு காசும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பெரும்பாலும் 2,000 இற்கும் முன்னரே காணாமல் போனவர்களின் தாய்மார்கள். மொத்தம் 16,000 பேரில் சுமார் 7,000–8,000 பேர் அதற்கு முன்னரே பதிவு செய்யப்பட்டவர்கள்.

இப்போது, இலங்கை இழப்பீடு அலுவலகத்தில் நியமிக்கப்படவிருக்கும் இரண்டு உறுப்பினர்களும் இராணுவ பின்னணியுடையவர்கள் இதனால் பாதிக்கப்பட்ட எமது மக்களை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஐந்து உறுப்பினர்களில் மூவர் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். இந்நிலையில், நஷ்டஈடு அலுவலகம் எவ்வாறு நம்பகமாக செயல்படும் என்று நீங்கள் எப்படி கூற முடியும்?

மேலும், அன்றாட பிரச்சினைகள், உதாரணத்திற்கு மட்டக்களப்பு மருத்துவக் கல்லூரி பதாதை சிங்களத்தில் மட்டுமே உள்ளது, தமிழில் இல்லை. இவற்றையும் நான் எழுத்து மூலமாக தெரிவிப்பேன். எனது நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதே ஆகும் என தெரிவித்தார்

இந்திய இனவழிப்பு இராணுவத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு..!

0

கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொதுமக்களின் 38ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி வெளி வாசலில் இடம்பெற்றது.

இதனை கொக்குவில் படுகொலை நினைவேந்தர் குழு ஏற்பாடு செய்திருந்தது.



பொதுசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் மற்றும் 22, 23, 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை, கொக்குவில் பிரம்படி கோண்டாவில், கொக்குவில் இந்து கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் இந்திய இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை..!

0

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மொழிபோல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடன்படவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.



நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைத் தேசிய நெறிமுறைகளினூடாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் எனவும், அந்த செயன்முறையானது, உள்ளக செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



இந்த விடயங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விசாரணைகளை அரசாங்கம் எதிர்ப்பதாகவும் பிரதமர், நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்தவகையில் நம்பகமான உள்நாட்டு பொறிமுறையினூடாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்படும் பாடசாலை நேரம்; போராட்டத்திற்குத் தயாராகும் அதிபர் – ஆசிரியர்கள்..!

0

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது.



இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்கள், நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.



கல்வியாளர்களுடன் முறையான ஆலோசனை இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீடிக்கப்பட்ட நேரம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறும் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

குண்டு துளைக்காத பென்ஸ் கார் மீட்பு; இந்தியத் தூதரகத்திடம் விளக்கம் கோரல்..!

0

கொழும்பு – நுகேகொட, பாகொடை வீதியில் உள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு துளைக்காத (Bulletproof) பென்ஸ் ரக கார் ஒன்றை மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் மீட்டனர்.

சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் குறித்த பழுதுபார்க்கும் நிலையத்தில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, பழுது பார்ப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட, இலக்கத் தகடுகள் இல்லாத இந்த காரை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இது குண்டு துளைக்காத வகையைச் சேர்ந்த வாகனம் என உறுதி செய்யப்பட்டது.



இந்த பென்ஸ் ரக கார் 2008 ஆம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேவைக்காக, குறித்த வாகனத்தை இறக்குமதி செய்த டிமோ நிறுவனத்துக்கு மீண்டும் கொண்டு வரப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுங்கம் மற்றும் டிமோ நிறுவனத்திடம் அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், இந்த வாகனம் 2008 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் (இந்தியத் தூதரகம்) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்தது.



இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகத்திடமிருந்து அறிக்கை கோரப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை வாகனம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாகனம் ஒரு முக்கிய நபருக்காகப் பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறியும் நோக்கில் பல கோணங்களில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்கிசையில் வசிக்கும் (43) வயதுடைய குறித்த வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்தின் உரிமையாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மன்னார் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம்..!

0

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று வியாழக் கிழமை(23) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி காலத்தில் ஏற்பட உள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது, அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து கலந்துரையாடும் அவசர முன்னாயத்த கலந்துரையாடலாக இடம்பெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது இயற்கை அனர்த்தங்களின் போது பாதிப்புக்கு உள்ளாகும் ஓர் பகுதியாக காணப்படும் நிலையில் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.



மத்திய அரசுக்குச் சொந்தமான நீர்ப்பாசன திணைக்களம், பிரதான குளங்களில் நீர் அதிகமாக பெருக்கெடுக்கும் போது ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைப்பது தொடர்பாகவும், மாகாண சபைக்கு சொந்தமான நீர்ப்பாசன குளங்கள், ஆறுகளில் திடீரென ஏற்படுகின்ற வெள்ள நிலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பிலும்,

மன்னார் மாவட்டத்தில் 165 க்கும் மேற்பட்ட குளங்கள் கமநல அபிவிருத்தி திணைக்களங்களுக்குள் காணப்படுகின்றது. அந்த குளங்களில் ஏற்படுகின்ற வெள்ள நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.



அத்துடன் மன்னார் மாவட்டத்தில் வெள்ள நிலைமையின் போது மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்குவதற்கு தற்காலிக பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. அவ்வாறான பாதுகாப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும்,கலந்துரையாடப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிலைமை ஏற்படுகின்ற போது அதை கடலுக்கு வெளியேற்றுகின்ற சந்தர்ப்பங்களில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மன்னார் நகரில் வெள்ளை நீரை கடலுக்குள் செலுத்துவது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.



குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே. திலீபன், திணைக்கள தலைவர்கள், முப்படையினர், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொலிசாரின் ஆதரவுடன் கணவர் மீது கொலை முயற்சி; பயத்தில் பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள்..!

0

கிளிநொச்சியில் தனது கணவருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக பெண்ணொருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இந்தநிலையில், பளையினை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்ய முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, எமக்கு நீதி வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 19 ஆம் திகதி செம்பியன் பற்று வடக்கு கடற்கரை பகுதிக்கு எனது கணவன் சென்று கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து எனக்கு அழைப்பு ஒன்று வந்த நிலையில் அதில் எனது கணவன் விபத்துக்குள்ளாகி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு எனது மகள் சென்றார்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் எனது கணவனை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் எனது மகளை மோசமான வார்த்தைகளால் பேசிவிட்டு அப்பாக்கு பெரிய பிரச்சினை இல்லை என கூறி அந்த இடத்தினை விட்டு விரட்டியுள்ளனர்.



பின்னர் எனது கணவனுடன் விபத்துக்கு உள்ளான நபரை, கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் தமது காரில் எற்றி சென்று விட்டு எனது கணவனை நடு வீதியில் விட்டு விட்டு சென்றனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னரே எனது கணவனின் அண்ணனுடன் எனது கணவனை சிகிச்சைக்காக வைத்தியசாலை அழைத்து சென்றேன்.

அதன் பின்னரே எனது கணவன் கண் விழித்து எனக்கு குறித்த தகவல்களை கூறினார்.

அவர் கூறியதாவது, நான் விபத்துக்கு உள்ளான போது எனது காலில் சிறியளவு காயம் மட்டுமே இருந்தது. பின்னர் சிறிது தூரத்திற்கு அப்பால் காரில் வந்த பளையினை சேர்ந்த நபர் எனது காயப்பட்ட காலிற்கு மேல் பல தடவை காரால் ஏற்றினார் என தெரிவித்தார்.



இதற்கு பின்னரே எனக்கு தெரியும் இச் சம்பவம் எனது கணவனை கொலை செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிய வந்தது.

அதன் பின்னரே என் கணவனுடன் விபத்துக்கு உள்ளான நபரை பார்த்த போது அவர் பல தடவை எனது வீட்டுக்கு முன்னால் விபத்து நடைபெற்ற நாள் சென்றார் என தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்ய சென்ற போது முறைப்பாட்டினை என்னிடம் பதிவு செய்யவில்லை.

அத்தோடு, இன்றைய தினம் (23) எனது கணவனிடன் காவல்துறை வாக்கு மூலம் எடுக்க சென்று தாமாகவே வாக்குமூலம் எடுத்ததோடு எனது கணவனின் எந்த விதமான முறைப்பாடுகளையும் பதிவு செய்யவில்லை.



எனது கணவனை தினமும் கொலை செய்ய முயன்ற பளையினை சேர்ந்த நபர், அவரை பார்வையிட சென்று கடுந்தொனியில் மிரட்டுவது மற்றும் எனது உறவினர்களை வெட்டுவேன் என கூறி சென்றுள்ளார் இதற்கான ஆதாரங்களும் எம்முடம் உள்ளன.

விபத்து இடம்பெற்ற நாளிலிருந்து இது வரை நானும் எனது இரு பெண் பிள்ளைகளும் எமது வீட்டிற்கு செல்லவில்லை மற்றும் எனது பிள்ளைகள் பாடசாலை செல்லவில்லை.

எமக்கு குறித்த நபரால் பயமாக உள்ளது, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளார். பளை காவல் துறையினர் அவருக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் மாயம்; உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை..!

0

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் இளைஞனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி கடந்த 21 ஆம் திகதி அக்கராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் இவரது உறவினர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.



இவரை கண்டவர்கள் 0771861326 அல்லது 0774604937 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கில் முழுவீச்சுடன் போதைப் பொருளை பரப்பும் இராணுவம் – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

0

வட மாகாணத்தில் போதைப் பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளதாகவும், மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதைப்பொருள் பூச்சிய பாவனையில் இருந்தது. அவர்கள் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இயங்கியதால் இது சாத்தியமானது.

இந்த காலப் பகுதியில் வடக்கில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இருந்தமையினால் அங்கு போதை அச்சுறுத்தல் குறைந்த அளவிலேயே இருந்தது.

எவ்வாறாயினும், போர் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே வடக்கில் பாரியளவில் போதைப்பொருள் பரவல் தொடங்கியுள்ளது.

இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று சில பகுதிகளில் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக இராணுவ முகாம் மாறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் புரட்சியை தோற்கடிப்பதற்கு இராணுவத்தின் ஊடாக பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளையும் காவல் நிலையங்கள் ஏற்க மறுகின்றன. எனவே, போதைப்பொருள் பரவலில் இராணுவத்துக்கு உள்ள தொடர்பு குறித்த தேடிப்பார்க்க வேண்டும்.

காவல்துறை, கல்வி, சுகாதார போன்ற சமூகத்துக்கு மிகவும் தேவைப்படும் விடயத்தை அந்ததந்த மக்களிடமே விடவேண்டும். அப்போதுதான் தங்களது மக்களுக்கு தாம் பொறுப்பானர்கள் என்ற உணர்வு ஏற்படும்.

மாறாக, வடக்கு கிழக்குடன் எவ்வித தொடர்பல்லாத தரப்பினரால் அங்குள்ள பிரச்சினைகளை ஒருபோதும் தீரக்க முடியாது எனவும் கடந்த காலங்களில் இத்தகைய தரப்பினரின் செயற்பாட்டாலேயே வட மாகாணம் திட்டமிட்ட வகையில் கல்வி உள்ளிட்ட விடயங்களில் பின்தள்ளப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

எனவே, அரசாங்கம் எடுக்கும் போதைப்பொருள் ஒழிப்புக்கு தேசிய வேலைத் திட்டத்துக்கு தங்களால் பூரண ஆதரவு வழங்கப்படும்.

எனினும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதாயின் இந்த செயற்பாட்டிலிருந்து இராணுவத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நிபுணத்துவம் பெற்றவர்களை மாத்திரம் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தினால் மாத்திரமே போதைப்பொருள் ஒழிப்பு என்பது சாத்தியப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அதேநேரம், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மாறாக போதைப்பொருளை விற்பவர்களே தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பு மேயரின் அதிரடி; நடைபாதையில் இனிமேல் கடைகளுக்கு இடமில்லை..!

0

கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது வேறு எந்த சக்தியையோ இதுபோன்ற முன்னேற்றங்களைச் செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் திருமதி வ்ராய் கெல்லி பால்தாசர் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி நகராட்சியின் அக்டோபர் மாத கவுன்சில் கூட்டத்தில் மேயர் வ்ராய் கெல்லி பால்தாசர் இவ்வாறு கூறினார்.

கொழும்பு மாநகர சபையில் நடைபாதையில் கடைகள் மற்றும் பிற கட்டுமானங்கள் கட்டப்படுவதால், மக்கள் பிரதான சாலையில் நடக்க வேண்டியுள்ளது என்றும், மக்கள் பிரதான சாலையில் நடந்து செல்லும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்தப் பொறுப்பும் நகராட்சி மன்றத்தின் மீது விழும் என்றும், நகரத்தில் இதுபோன்ற கட்டுமானங்கள் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் கூறினார்.

கொழும்பில் நடந்த மாவட்டக் குழுக் கூட்டத்தில் நகரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக இந்த நிலைமை விவாதிக்கப்பட்டதாகவும், நடைபாதையில் பணிபுரியும் மக்களுக்கு ஓர் இடத்தை வழங்குவதற்கும் அந்த சூழ்நிலையில் நடவடிக்கை எடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த அலுத்கெதர சபையில் முன்வைத்த பின்வரும் கேள்விக்கு மேயர் வ்ராய் கெல்லி பால்தாசர் பதிலளித்து கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

error: Content is protected !!