Saturday, July 18, 2026
Huis Blog Bladsy 96

வெகு விமர்சையாக நடைபெற்ற ஆயிஷா வித்தியாலயத்தின் மாணவர் கெளரவிப்பு நிகழ்வு..!

0

இன்றைய தினம், வவுனியா புதிய சாலம்பக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், மாணவர் கெளரவிப்பும் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதாத் பகீரதி அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இவ் விழாவில் 2023, 2024ம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கெளரவிப்பும், தற்போது தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாணவத் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. முகுந்தன், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் திரு. ஜமீஸ், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. பைசல் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சிரேஸ்ட காவல்துறை பதில் பணிப்பாளர் அதிரடியாக கைது..!

0

காவல்துறை கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சதீஸ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிரான பல்வேறு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை – ஆனந்த விஜேபால

0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து எமது செய்தி சேவைக்கு பதிலளித்த போது, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்களையும் அவர் எமது செய்தி சேவையிடம் பகிர்ந்து கொண்டார்.

இதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்துரைத்த அவர், கடந்த அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கான தேவை ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கான தேவை ஏற்படவில்லை எனக் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்த போது, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக் காட்டினார்.

எனவே, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றிருந்தால், உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

அத்துடன், செம்மணி விவகாரத்தையும் தற்போதைய அரசாங்கம் மூடி மறைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

செம்மணி மனித புதைகுழி, விடுதலை புலிகளின் கீழும் இராணுவத்தின் கீழும் இருந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, செம்மணியில் கிடைக்கும் மனித என்புக்கூடுகள் எந்த காலத்திற்கு உரியது என்பதை கண்டறிய வேண்டும்.

அதன்பின்னர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால், இவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க முடியாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் சட்டத்தரணி சுமந்திரன் கலந்துரையாடல்..!

0

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும், தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (13.08.2025) வவுனியாவில் இடம் பெற்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை போன்ற விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர்கள் ஆதரவினை வழங்குமாறு கோரியே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை அனுஸ்டிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) அதனை அனுஸ்டிக்குமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வந்த கோரிக்கை காரணமாக அதனை 18ஆம் திகதி என மாற்றியுள்ளோம்.

அந்தவகையில் முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு மரணமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. பிரதானமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் அழைக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது பகுதிகளில் மக்கள் மத்தியில் தேவைக்கு அதிகமான இராணுவக்குவிப்பு மற்றும் இராணுவ முகாம்கள் நீண்டகாலமாக நிலைகொண்டிருப்பதால் இப்படியான தொடர் விளைவுகள் ஏராளமாக நடக்கின்றது. எனவே இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.

மக்களின் சாதாரண வாழ்க்கையிலே அவர்களின் ஈடுபாடு இருக்க கூடாது என நீண்ட நாட்களாக நாங்கள் சொல்லி வருகின்றோம். அதன் விளைவே இந்த மரணமும் கூட. எனவே இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். செம்மணி மனிதப்புதைகுழியானது மிகவும் மோசமான முறையிலே செய்யப்பட்டிருக்கின்றது. குழந்தைகளது சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஆதாரங்கள் வெளிவரும் சந்தர்ப்பங்களில் அவற்றை எல்லாம் முன்னிலைப்படுத்தி இந்த ஹர்த்தாலை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். வடக்கு, கிழக்கை முற்றிலுமாக முடங்கச் செய்யும் போராட்டமாக இதனை நாம் நடத்த வேண்டும்.

வடக்கின் ஏனைய மாவட்டங்களின் வர்த்தக பிரதிநிதிகளுடனும் நாங்கள் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளோம். அவர்கள் ஆதரவினை வழங்குவதாக சொல்லியிருக்கின்றனர். கிழக்கிலும் முழுமையான ஆதரவு வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள். இதுவரை பாரியளவிலான ஆதரவு இந்த ஹர்தாலுக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் சிறுவர்கள் இருவரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!

0

களுத்துறை, வரக்ககொட பகுதியில் 8 வயது சிறுமியை இயற்கைக்கு மாறான முறையில் மிக கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாய் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பயத்தில் யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.

இரவில் அவரது தாயார் சிறுமியை குளிக்க வைக்கும் போது சிறுமிக்கு ஏற்பட்ட வலி காரணமாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி சிறப்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியலில் மீண்டும் கவனம் பெறும் பீரிஸ்; நாளை முக்கிய கலந்துரையாடல்..!

0

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நாளை (14 ஆம் திகதி) சிறப்பு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் கூறுகையில், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியை உருவாக்க இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலில் அநுர அரசுக்கு எதிராக பலமாக செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்காக எதிர்க்கட்சி அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக எதிர்க்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் பேரில் இனவாதத்தை தூண்ட முயற்சி; கம்மன்பிலவிற்கு எதிராக விசாரணை ஆரம்பம்..!

0

சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன நேற்று (12) குற்றப் புலனாய்வுத் துறையில் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொல்கஹவெல பகுதியில் ஒருவர் காணாமல் போனது மற்றும் அது தொடர்பான வழக்குகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கம்மன்பில இடையூறு விளைவிப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் கைதுகள் நடைபெறுவதாகக் கூறி இனவெறியைத் தூண்ட முயற்சிப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன சம்பந்தப்பட்ட சம்பவம், பொல்கஹவெல பகுதியில் வசிக்கும் ஒருவரின் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையது என்றாலும், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன சம்பவமும் அந்த சம்பவத்துடன் தொடர்புடையது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இந்த காணாமல் போன சம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் கடற்படைக்குள் செயல்படும் ஒரு குழுவின் தலையீடு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்தக் கைதுகளை விமர்சித்து, தொடர்புடைய நடவடிக்கைகளைத் தடுத்ததாக, காணாமல் போன பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் அச்சலா செனவிரட்ன தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்தக் கைதுகள் நடைபெறுவதாகக் கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இனவெறியைத் தூண்டி வருவதாகவும் அவரது புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு..!

0

முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி வரையில் நிசாந்த உலுகேதென்னவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

இதன் போது நிசாந்தவை 27ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிசாந்த, கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவமொன்று தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 28ம் திகதி கைது செய்யப்பட்டார்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கையின் 24ம் கடற்படைத் தளபதியாக நிசாந்த உலுகேதென்ன கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர பகுதிக்குள் வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரிப்பு..!

0

பருவப்பெயர்ச்சி காற்றுடன் இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மன்னார், யாழ்ப்பாணம், கற்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் அதிகளவான கழிவுகள் குவிந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.

குறிப்பாக சென்னை, கேரளா, கொச்சின், கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் போத்தல் வகைகள், வலைகள், பூங்கொத்துக்களுக்கு பயன்படுத்தப்படும் கயிறு போன்றவையே அதிகளவாக நாட்டின் கடற்பிராந்தியங்களில் தேங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இருதரப்பினரும் இணைந்து நிரந்தர தீர்வை காண வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

யுத்த காலம் முதல் இன்றுவரை இலங்கையின் கடற்பகுதியை இந்தியா குப்பைத் தொட்டியாகவே பயன்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமனம்..!

0

புதிய பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுளளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று(13) பிற்பகல் வழங்கப்பட்டது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 61 ஈ (ஆ) சரத்தின்படி அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை பொலிஸ் சேவையின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்ரபள், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய 03 பதவிகளையும் வகித்து பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட முதலாவது பொலிஸ் மாஅதிபராக வரலாற்றில் முதன்முறையாக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இடம் பிடித்துள்ளார்.

error: Content is protected !!