இராணுவ முகாம்களையோ அல்லது காவல் நிலையங்களையோ தேவையில்லாமல் அகற்ற வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் (Online Safety Act, No. 9 of 2024) திருத்துவது குறித்த அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிக்க அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் உட்பட பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் முடிவுக்கு இணங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர், நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் 2024 ஜூலை 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தங்களை பரிசீலிக்கவும், பொதுமக்களின் ஆலோசனையைப் பெற்று, தேவையான பரிந்துரைகளை வழங்கவும் ஒரு குழுவை நியமித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று முதல் ஒரு மாத காலப் பகுதிக்குள் நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவது குறித்து பொது மக்களிடமிருந்து அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு கோரியுள்ளது.
ஏதேனும் அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் அல்லது யோசனைகளை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழுவுக்கு அனுப்ப முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தபால் மூலமாக அனுப்புவதாயின், கடித உறையின் மேல் இடது மூலையில் “2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு” என்று குறிப்பிடப்பட்டு செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, இல. 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அத்துடன் “2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு” என்ற தலைப்பின் கீழ் legal@moj.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் சமர்ப்பிப்புகளைச் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல் செயல்படும்.
இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், வீடியோக்கள் மற்றும் படத் தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் காலத்தில் விடிவு கிடைத்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு முதல் முறையாக இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும் இன்று புதன் கிழமை (13.08.2025) காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பளை மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, கடற்றொழில், நீரியல்வள அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சுரேன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் கே.நிஹால், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள், சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வவுனியா – ஓமந்தை, கொந்தக்காரன் குளம் பகுதியில் தமிழ் மக்களின் காணிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வனவளத் திணைக்களத்தின் காணி என்று அச்சுறுத்த முற்பட்ட போது மக்கள் முரண்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து RFO தர அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தும் காட்சிகள் தற்போது வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியை காட்டி மிரட்ட முற்பட்ட குறித்த RFO தர அதிகாரி இன்று சில இளைஞர்களுடன் முரண்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆயுதங்களை பகிரங்கமாக மக்களுக்கு எதிராகப் பயன்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக அனுர அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? என்பதே எமக்கு முன்னுள்ள வினா.
பத்து வருடங்களாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் கணிசமான எண்ணிக்கையிலான மாகாண சபைகள் ஏற்கனவே செயலிழந்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்களும் தெரிவித்துள்ளன.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.
அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணப் பையுடன் நின்றிருப்பதாக அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில் அவர் இலங்கை திருகோணமலை மாவட்டம், ஆண்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அங்கிருந்து கள்ளத்தனமாக படகில் தப்பிவந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் அப்பெண்ணை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதில், தலைமன்னாரில் இருந்து நள்ளிரவு சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு அதிகாலையில் அரிச்சல்முனை வந்திறங்கியமை தெரிய வந்தது. படகுக்கு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
இவரது குடும்பத்தினர் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பிவந்து தமிழ் நாட்டின் பல்வேறு முகாம்களில் தற்போது தங்கியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றிய தரவுகளின்படி, இலங்கையின் பெயரில் எந்தவொரு செயற்கைக் கோளும் இல்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிறுவனம் ஒன்று உள்ளது. அதுதான் சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union) அல்லது ITU. இந்த ITU மூலம்தான் இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.
“செயற்கைக்கோளை தாக்கல் செய்யும் செயல்முறை மூன்று முக்கிய படிகளைக் கொண்டுள்ளது என்று ITU கூறியுள்ளது.
இதில் முதலாவது படிமுறை என்னவெனில், திட்டமிடப்பட்ட செயற்கைக்கோள் வலையமைப்பின் தொழில்நுட்ப விபரங்களை தொடர்புடைய நிர்வாக அமைப்பால் ITUஇற்கு சமர்ப்பிப்பதாகும்.
இரண்டாவதாக, தகவல் தொடர்பு இடையூறுகளைத் தவிர்க்க, வழங்கப்படும் இந்தத் தகவல்கள் மற்ற உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, பதிவு மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கான இறுதி அளவுருக்கள் குறித்த அறிவிப்பு. இந்த செயல்முறையே, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால், உலகளவில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, செயற்கைக்கோளை ஏவுவதற்கான நிலையான முறையாகும்.
இதற்கு வழக்கமாக குறைந்தபட்சம் மூன்று வருடங்களும் அதிகபட்சம் ஏழு வருடங்களும் ஆகும். அதுதான் செயல்முறை. ITU எனப்படும் இந்த அமைப்பின் இலங்கை சார்பில் இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுப்புரிமையை கொண்டுள்ளது.
அதன்படி, இந்த புவிசார் சுற்றுப் பாதைகளில் இலங்கை 121.5 மற்றும் 50 என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இதில் உள்ள தகவல்களின்படி, இந்த இடங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, நேபாளம், தஜிகிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் விரும்பினால் இந்த இடங்களில் தங்கள் பணியைத் தடையின்றித் தொடரலாம்.
ITU ஊடாக கிடைக்கும் தகவல்களின்படி, 121.5 மற்றும் 50 என இந்த புவிசார் சுற்றுப்பாதைகளில் தற்போது இலங்கை என்ற பெயரில் எந்த செயற்கைக் கோளும் இல்லை.
பின்னர், இந்த ITU ஊடாக சுப்ரீம் சாட் வன் என்ற செயற்கைக்கோள் இயக்கப்படுகிறதா என ஆராய்ந்தோம். அப்படி எதுவும் இல்லை. சுப்ரீம் சாட் வன் பின்னர் சைனாஸ் எட் டுவெல் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் தொடர்புடைய இந்த இடத்தில் சுற்றுப்பாதையில் உள்ள சீன செயற்கைக்கோள் பற்றி ITU வலைத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை.
இலங்கைக்குச் சொந்தமான இந்த சுப்ரீம் சாட் வன் அல்லது சீனா சாட் டுவெல் என்ற பெயரில் இலங்கைக்கு சொந்தமான சுற்றுப் பாதைகளிலிருந்து எந்தவொரு தகவலும் இல்லையென ITU தெரிவிக்கிறது.” எனத் தெரிவித்தார்.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டின் மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருதாவது,
வவுனியா, உக்குளாங்குளம், சிவன்கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் நுழைவாயில் மற்றும் வீட்டு வேலி மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
தாக்குதல் சத்தத்தையடுத்து வெளியில் வந்த வீட்டு உரிமையாளர் மீதும் அக் குழு தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.