Saturday, July 18, 2026
Huis Blog Bladsy 106

யாழில் சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாக மாயம்..!

0

யாழில் பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என தாயார் யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

யாழ் – செல்லர் வீதியில் வசிக்கும் 17 வயதுடைய மாணவி பிரதீபன் விகாசினி என்பவரை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கடந்த யூலை 15 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல் வேளை வழமை போன்று சென்றுள்ளார்.

ஆனால் அவர் பாடசாலைக்கு சென்று மகனை ஏற்றிவரவில்லை அத்துடன் வீட்டுக்கும் வரவில்லை என குறித்த மாணவியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இன்றுடன் இரு வாரங்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என அவர் தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளதுடன் தனது மகளை கண்டுபிடித்து தர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்ட நீதவான் நீதிமன்றம் இன்று இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அம்பாந்தோட்டை நீதிமன்றில் நாமலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமல் இலங்கையின் ஜனாதிபதியாவார்; எனது ஆதரவு நாமலுக்கு – அர்ச்சுனா எம்.பி

0

எதிர்வரும் காலங்களி்ல் நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என்றும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன்,

2028 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார். இது தொடர்பில் சில விடயங்களை அவரிடம் அண்மையில் கலந்துரையாடினேன். இதன் போது, அவரது தந்தையை போல மோசடிகளை செய்ய வேண்டாம் என கூறினேன்.

உங்கள் தந்தை பெரியப்பா, சித்தப்பா போன்றோர் மரணிப்பது தொடர்பான வைராக்கியம் தமிழர்களிடையே காணப்படுகின்றது என்பதை எடுத்துக் கூறினேன்.

அத்தோடு, நாமல் அவ்வாறு ஜனாதிபதியானால் எனது முழு ஆதரவையும் அவருக்கு வழங்வேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கூறியுள்ளார்.

போதையில் தள்ளாடிய பிரபல பாடசாலை மாணவிகள்; அதிபர் பகீர் தகவல்..!

0

பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாணவிகளில் இரு மாணவிகளே இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒர் நபரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.

மேற்படி மாணவிகள் 2 குளிசைகள் பின்னர் 3 குளிசைகளை பாடசாலையின் கழிவறைக்குச் சென்று இதை அருந்துவது தெரிய வருகின்றது.

முன்னாள் கடற்படை தளபதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது..!

0

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற ) நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது குருணாகல் – பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டி வடக்கு, கிழக்கில் நாளை போராட்டம்..!

0

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை (26) வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்தப் மாபெரும் போராட்டங்கள் வடக்கு- கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரத்தில் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழிப் பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பஸ் நிலையத்துக்கு அருகாமையிலும்,

மன்னாரில் நகர்ப் பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலையில் சிவன் கோயில் முன்பாகவும் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம் என்று வடக்கு – கிழக்குச் சமூக இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 9 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..!

0

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 3 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 19ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஆனந்தராசா வின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று செம்மணி புதை குழியில் இருந்து மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 03 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் வரையில் 85 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் கைதான முன்னாள் போராளியால் அதிர்ச்சியில் புலனாய்வு அதிகாரிகள்..!

0

அண்மையில் கொழும்பில் கைது செய்யப்பட்ட ஒரு முன்னாள் போராளியின் பரபரப்பு வாக்குமூலங்கள், நாட்டின் முக்கிய புலனாய்வு அதிகாரிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன, இந்த கைது சாதாரணமானதல்ல, இது ஒரு பனிப்பாறையின் நுனி மட்டுமே என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் வாக்குமூலங்கள், கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களையும், புலனாய்வுத் துறையின் ரகசிய நடவடிக்கைகளையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருக்கிறது” என உள்வட்டாரங்கள் பதறுகின்றன.

மேலதிக விசாரணைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பல உயரதிகாரிகளின் பதவிகள் கேள்விக்குறியாகியுள்ளன. இந்த வாக்குமூலங்கள் ஒரு சங்கிலித்தொடர் போல பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொணரும் என்பதால், புலனாய்வுத் துறையினர் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.

அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பப் போகும் இந்த விவகாரம் குறித்து மேலும் பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் போராளியின் வாக்குமூலங்கள், இதுவரை மூடிமறைக்கப்பட்டிருந்த பல ரகசியங்களை கிழித்தெறியப் போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்! என அதிர்வு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரணிலால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை அடிப்படை உரிமைகளை மீறியது..!

0

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இலங்கை உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுமக்களின் போராட்டங்களை அடக்குவதற்கு இந்த அவசரகால நிலை பயன்படுத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சிவில் சமூக அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 18, 2022 அன்று விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அறிவித்தமை அரசியலமைப்பு உரிமைகளை மீறியதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது

நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய அமர்வு, 2-1 என்ற விகிதத்தில் மனுதாரர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறியது என்பதை உறுதிப்படுத்தியதுடன், சட்டச் செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மன்னாரில் ஆசிரியையின் வீட்டிற்குள் திருடன்; கத்தியை காட்டி நகைகள் பறிப்பு..!

0

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நானாட்டன் முருங்கன் வீதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் புகுந்த முகமூடி திருடன் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவமானது நேற்றைய தினம் புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த போது பின் பக்க வேலியால் வீட்டுக்குள் புகுந்த திருடன், சத்தம் போடக் கூடாது என்று கத்தி முனையில் மிரட்டி ஆசிரியையின் சங்கிலியை கொள்ளையிட்டதுடன்,

குறித்த ஆசிரியை கையில் அணிந்திருந்த வளையல்களை கழற்ற முடியாததால் திருடன் அதனை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முருங்கன் பொலிஸார் வருகை தந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியையிடமிருந்து முகமூடித் திருடன் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!