Thursday, July 23, 2026
Huis Blog Bladsy 135

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ நோக்கிய செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

0

வளமான நாடு – அழகான வாழ்க்கை’ நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம்.

வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டிற்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது. மேலும் பூகோள அரசியலை போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வருகிறது.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன.

இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளை கலைந்து சமூகத்திற்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும்.

மேலும், மக்கள் வாழ்வை புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான மனப்பாங்கு மற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும்.

நாட்டிற்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்யவும் நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச் செய்வதற்காகவும் இந்த புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும்! என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதி, செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக இந்த வருடம் அமையட்டும் – வடக்கு ஆளுநர்

0

இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக அமையட்டும்’ என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், வடக்கு மாகாண மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்பையும் குறிக்கின்றது. இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும்.

ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் உணர்வோடு இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்வோம். இந்தப் பண்டிகை நாளில், எமது வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம். சமூகங்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகளை வலுப்படுத்துவோம்.

கடந்த காலங்களில் பின்னடைவைச் சந்திருந்த எமது நாடும், மாகாணமும் மீண்டெழுந்து வரும் இந்தத் தருணத்தில் புதிய உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடும் நாம், எதிர்காலத்தில் சிறப்பான இலக்கை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; விளையாட்டு பயிற்றுநர் கைது..!

0

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாயில் துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுநர் இன்று பகல் கிளிநொச்சி பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் பொலீஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலீஸார் சந்தேக நபரை கிளிநொச்சி அறிவியல் நபர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

2024ம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு..!

0

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திணைக்களம் திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பல நடைமுறை சிக்கல்கள் தாமதத்தை ஏற்படுத்தியதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 331,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்து சென்றவர்கள் எமது ஊர்களையும் மக்களையும் மறக்கவில்லை – வடக்கு ஆளுநர்

0

தொண்டு அமைப்புக்கள் பல செயற்பட்டிருந்தாலும் அவை காலப் போக்கில் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் வெளிப்படைத் தன்மையுடன் இயங்குவதால் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்னமும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் புகழாரம் சூட்டினார்.

இளவாலை மக்கள் ஒன்றிய அமைப்பின் பிரதான நிதிப் பங்களிப்புடனும், அமரர் மருத்துவர் மோகன் அவர்களது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களினது நிதிப்பங்களிப்புடனும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட ‘மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்’ இன்று சனிக்கிழமை (12.04.2025) இளவாலையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் தனது உரையில்,

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பல சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்கள் மிகச் சிறப்பாக உள்ளக விளையாட்டரங்கை இன்று பெற்றிருக்கின்றார்கள்.

எமது மாகாணத்தில் இயங்கும் சில அமைப்புக்கள் புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்று அவர்களை ஏமாற்றியிருக்கின்றார்கள். இவ்வாறு ஏமாற்றுவதற்காகவும் சிலர் அமைப்புக்களை ஆரம்பித்திருந்தார்கள். அவை எல்லாம் நிலைத்து நிற்பதில்லை. நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தால்தான் நிலைத்து நிற்கும்.

இன்றைய இளையோருக்கு பொழுதுபோக்குக்கான வசதிகள் உரிய வகையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் சமூகப் பிறழ்வை நோக்கிச் செல்கின்றனர்.

அவ்வாறு செல்பவர்களுக்கு புத்திமதி சொல்லவும் யாரும் முன்வருவதும் இல்லை. அந்தளவு தூரம் அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. ஆனால் இளையோரின் அவ்வாறான போக்கை மாற்றியமைக்க கூடிய ஒன்றாக இந்த உள்ளக விளையாட்டரங்கம் எதிர்காலத்தில் இருக்கும்.

அன்று நாம் பாடசாலை மாணவர்களாக இருந்த போது பாடசாலை முடிவடைந்த பின்னர் விளையாடுவோம். இன்று பிள்ளைகளுக்கு அவ்வாறான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. பிள்ளைகளை இவ்வாறான உள்ளக விளையாட்டரங்குகளுக்கு விளையாட அனுமதிக்க வேண்டும். அவர்களுக்குரிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.

புலம்பெயர்ந்து சென்றவர்கள் எமது ஊர்களையும், எமது மக்களையும் மறக்கவில்லை. அவர்களால் இங்கு பல விடயங்கள் நடந்தேறுகின்றன. இவ்வாறாக எமது மக்களுக்கும் குறிப்பாக இளையோருக்கும் தேவையான விடயங்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்ட பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.

அமெரிக்காவில் புதிய சட்டம்; இந்துக்கள் குறித்து அவதூறு பேசினால் கடும் தண்டனை..!

0

அமெரிக்காவில் முதன் முறையாக இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட யாப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான ஜோர்ஜியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து குறித்த சட்ட யாப்பை செனட் சபையில் அறிமுகம் செய்துள்ளனர்.

உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் இந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட யாப்பு, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும் என தெரிவிப்படுகின்றது.

அத்துடன் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் நடைமுறைக்கு வருவதையடுத்து இந்து மதம், இந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாலியல் சேட்டை; ஒருவர் கட்டுநாயக்காவில் கைது..!

0

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (12) காலை துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் பிட்ஸ் ஏர் விமானத்தில் ஏ.டி. 822 விமானத்தின் மூலம் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் விமானத்தில் பயணித்து கொண்டிருந்த போது பெண் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், இது குறித்து விமானக் குழுவினருக்குத் தெரிவிக்கப் பட்டதாகவும் அதன் பின்னர் சந்தேக நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதகவும் கூறப்படுகிறது.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடையவர் என்றும் குறித்த சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்; பொலிஸார் உறுதி..!

0

16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி பிரதேசத்துப் பாடசாலை விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் சனிக் கிழமை (12) தொடர்பு கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது.

16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம். ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாண கல்வி அமைச்சானது இத்தகைய பாலியல் மற்றும் இரத்மலானை மது விருந்து உள்ளிட்ட மோசமான ஒழுக்கச் சீர்கேடுகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அதேவேளை கட்டுப்பாடு, ஒழுக்கங்களைப் போதிப்பவர்களுக்கு எதிராகவே பழிவாங்கல் செயற்படுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிய பயிற்றுவிப்பாளர்..!

0

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் குறித்த நபர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இவரிடம் குறித்த விளையாட்டு பயிற்சிக்காக சென்ற சிறுவர்களில் 16 பேரையே அவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 10 தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இவர்களில் சிலரின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்திய போது ஆரம்பத்தில் இரண்டு சிறுவர்கள் மூலமே விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் இவ்வாறு சீண்டலுக்கு உள்ளானதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸாரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (11) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண விளையாட்டு துறை அமைச்சின் செயலாளரின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் மற்றும் தமது கதிரைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிக நேரத்தை செலவிடுவதால் தொடர் கண்காணிப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என்பதாலேயே இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

எனவே தாபனவிதிக்கோவை மற்றும் தனது நியமன கடமைகளை சரிவர மேற்கொள்ளத் தவறிய வடக்கு மாகாண விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் தனது தவறுகளை ஏற்று பதவி விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய செயலாளரை பதவி நீக்க அல்லது உடன் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

வவுனியாவில் பெண்களின் சங்கிலி அறுத்த இராணுவ சிப்பாய் கைது..!

0

வவுனியாவின் பல பகுதிகளிலும் வீதியால் சென்ற பெண்களை பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்ததாக வவுனியாவில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற சங்கிலி அறுப்பு சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மோட்டர் சைக்கிளுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும், கடந்த ஜனவரி முதலாம் திகதி வேப்பங்குளம், 6 ஆம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரிடம் 2 பவுண் சங்கிலியும், கடந்த மார்ச் 31 ஆம் திகதி கூமாங்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இம் மாதம் முதலாம் திகதி நெளுக்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இராசேந்திரகுளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும் அறுத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபர் கடமை இல்லாத நேரங்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய அவரது சொந்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அறுக்கப்பட்ட சங்கிலிகளும் அடைவு வைத்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமில் பணியாற்றும் மிகிந்தலையைச் சேர்ந்த 30வயதுடைய இராணுவ வீரரே கைது செய்ய்பட்டுள்ளார்.

error: Content is protected !!