Thursday, July 23, 2026
Huis Blog Bladsy 136

வவுனியா ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை..!

0

வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்தி சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கிற்கு இன்று (11) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அதன் தேவைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு ஓமந்தையில் அமைந்துள்ளது. அங்கு பல தேவைகள் காணப்படுகின்றன. பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்றுவிப்பாளர்கள், அதற்கான உபகரணங்கள் என பல தேவைப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் காலங்களில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வடமாகாணத்தில் உள்ளக விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் மெய்வல்லுனர் பயிற்சிகள் என்பவற்றை எதிர்காலத்தில் வழங்கக் கூடியதாக இருக்கும். இந்தப் பிரதேசத்தில் நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டுத் துறையை வவுனியா மாவட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே காணப்படுகின்ற தீய பழக்கவழக்கங்கள், மது பாவனை, தொலைபேசி பாவைனை, போதைப் பொருள் பாவனை என்பவற்றை கட்டுப் படுத்துவதற்கு விளையாட்டு துறை அவசியம். அந்தவகையில் இந்த விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வவுனியா பிரபல பாடசாலை ஆசிரியர் தயாபரன் விபத்தில் சிக்கி பலி..!

0

வவுனியா வடக்கு ஓமந்தை மத்திய கல்லூரியின் தமிழ்ப் பாட ஆசிரியர் தயாபரன் அவர்கள் 04.04.2025 அன்று ஏற்பட்ட வீதி விபத்தில் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (09) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் கோடாவுடன் ஒருவர் பொலிசாரால் கைது..!

0

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கோடாவுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 லீற்றர் கோடா பெரலில் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வடமாகாணத் தொழிற்துறை வர்த்தகச் சந்தையை பார்வையிட்ட ஆளுநர்..!

0

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், தேசிய அருங்கலைப் பேரவை மற்றும் புடவைக் கைத்தொழில் திணைக்களம் இணைந்து யாழ் முற்றவெளியில் நடத்தும், ‘வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025’ இனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தக் கண்காட்சி நேற்று ஆரம்பமானது என்பதுடன் நாளை சனிக் கிழமையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை; வெளியான அறிவிப்பு..!

0

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 14 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலை முதலாம் வருட மாணவனின் காதை செவிடாக்கிய இரு மாணவர்களுக்குச் சிறை..!

0

யாழ் பல்கலைக் கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக் கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக் கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளான நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு மாணவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , தலைமறைவாகவுள்ள அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

வைத்திய சாலைக்குள் இளம் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வைத்தியர்..!

0

நீர்கொழும்பு பொது வைத்திய சாலையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் திகதி, பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற தனது தாயுடன் நீர்கொழும்பு பொது வைத்திய சாலைக்கு வந்த இளம் பெண், தன்னை பரிசோதித்த வைத்தியர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மூலம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதன்படி, குறித்த இளம் பெண்ணை கடந்த 2 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அங்கு வழங்கப்பட்ட வைத்திய அறிக்கையில் குறித்த இளம் பெண் திருப்தி அடையவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவரை விசேட மருத்துவ குழுவால் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கையில்,

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசு வைத்திய சாலையில் நடந்த இந்த கடுமையான சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, சட்டம் உடனடியாக அமுல்படுத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு தமது உச்சபட்ச ஆதரவை வழங்கும் என்றும், சுகாதார சேவையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமது சங்கம் நம்புகிறது என்றும், எதிர்காலத்தில் ஒரு வலுவான கொள்கை மற்றும் திட்டத்தை நிறுவுவதற்குத் தேவையான தலைமையை வழங்க சங்கம் தயாராக உள்ளது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

யாழில் கிராம சேவகரின் கடமைக்கு இடையூறு; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

0

யாழில் அரச கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பகுதியில் உள்ள கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் தொடர்பில் கிராம சேவையாளர் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு..!

0

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத் தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக குறித்த அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்திலும் கல்வியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் வலயப் பணிப்பாளர் தேர்தல் திணைக்களத்தால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் அதிபர்களின் ஊடாக அழுத்தங்களைப் பியோகித்து தான்தோன்றிதனமான உள்ளக இடமாற்றங்களை வழங்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பற்பசைக்குள் போதைப் பொருள்; வவுனியா சிறைக்கு எடுத்து சென்ற இருவர் கைது..!

0

பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச் சாலைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

error: Content is protected !!