Thursday, July 23, 2026
Huis Blog Bladsy 137

யாழில் உயரதிகாரிகளின் கூட்டுப் பழிவாங்கலால் பலியாகிய சிற்றூழியர்..!

0

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த கிளிநொச்சி நீர்பாசன திணைகள ஊழியரின் மரணத்தின் பின்னால் அவரது உயரதிகளின் செயலே உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர் அரசாங்கத்தில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்தைப் பெறும் சாதாரண ஒரு ஊழியர் என்றும் உயிரிழந்தவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த வருமானத்தை கொண்டே தனது குடும்பத்தை நடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது.

யாழ் பண்ணைப் பகுதியில் உள்ள நீர்ப்பாசனத திணைக்களத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த நபரை , கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உயரதிகாரிகள் மாற்றியுள்ளார்கள் . அவர் யாழ்ப்பாணத்திலிருந்த கிளிநொச்சி சென்று வருவதற்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா செலவேண்டியுள்ளதாக கூறப்படுகின்ற்து.

தனது சம்பளத்தின் பெரும் பகுதி போக்குவரத்திற்கு செலவாகிவிடும் என எண்ணிய அவர் , உயரதிகாரிகள் பலரிடம் தனது குடும்பச் சூழ்நிலையை கூறி கிளிநொச்சி இடமாற்றத்தை இரத்துச் செய்ய கேட்ட போதும் அவரது கோரிக்கை உயரதிகாரிகளிடம் எடுபடவில்லை.

கிளிநொச்சிக்கும் தினமும் சென்று வந்த போதும் தனது பிள்ளைகளின் சுகவீனம் மற்றும் அவர்களின் பாடசாலை கற்றல் நடவடிக்கை போன்ற செயற்பாடுகளுக்காக லீவு எடுத்ததாகத் தெரிய வருகின்றது.

குறித்த லீவுகளுக்கு முறைப்படி முன்னரே உயரதிகாரிகளின் அனுமதி பெறப்படவில்லை என காரணம் காட்டி அவரது சம்பளத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாவை கிளிநொச்சி நீர்ப்பாசணப் பொறியியலாளர் வெட்டியதாக கூறப்படுகின்றது.

இதனால் அதிர்ச்சியடைந்து கடும் விரக்தியுடன் வீடு திரும்பிய ஊழியர் தனது 3 பெண் குழந்தைகள், மனைவியை அநாதையாக விட்டுவிட்டு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது மரணவீட்டுக்கு நீர்ப்பாசணத் திணைக்கள உயரதிகாரிகள், ஊழியர்கள் வந்து கலந்து கொண்டிருந்ததாக கூறப்படும் அதேவேளை, ஆஸ்மாவின் கொடுமையால் நீர்ப்பாசன தற்கொலை செய்ததாக கூறி அவரது மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பல காலமாக ஆஸ்மா நோய் இருந்தவர் சம்பளம் கழித்தபின் தற்கொலை செய்தார் என்றால் அதற்கு என்ன காரணம் எனவும் சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பட்டுள்ளது.

அரச உயரதிகாரிகளில் சிலர் அரசாங்கத்தால் தமக்கு வழக்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் பெறுவதோடு, ஊழல், நிர்வாக துஷ்பிரயோகங்களையும் செய்து கொண்டு அப்பாவி ஊழியர்களை பழிவாங்குவது நியாயமானதா? என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட உயர் அதிகாரிகள் தொடர்பில் பொலிசார் சுயாதீன விசாரணை ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன்

வடக்கு மாகாணக் கல்வித் துறையிலும் சிற்றூழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மீதும் இத்தகைய பழிவாங்கும் நோக்கிலான மிலேச்சத்தனமான பல செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; மாணர்வகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு..!

0

பதினைந்து வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஆறு பேரை மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் வரும் 11 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் ஹோமாகம தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஹோமாகம தலைமையக மருத்துவமனையில் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு சந்தேக நபர்களில் மூன்று பேரையும், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்ற நான்கு பேரையும் பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

அப்போது, ​​ஹோமாகம தலைமையக பொலிசின் தலைமை ஆய்வாளர் பிரணீதா மனவடு, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி இன்னும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபர்களை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான் பத்மசிறி ஜெயவர்தன, ஆறு சிறார் சந்தேக நபர்களையும் மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்து வைக்கவும், 19 வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

பூசா சிறைச் சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை..!

0

பூசா உயர் பாதுகாப்பு சிறைச் சாலையில் தமிழ்க் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் இன்று (04.04.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நந்தகுமார் சிவாநந்தன் என்ற 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த கைதியின் உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு; சாதகமான பதிலை வெளியிட்ட சட்டத்தரணி..!

0

பிறப்புச் சான்றிதழ்களால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என நம்புவதாக ஜனாதிபதி சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நேற்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

“கடந்த 28ஆம் திகதி உயர் நீதிமன்ற அமர்வு, நீதியரசர் ச. துரைராஜா(PC), நீதியரசர் மஹிந்த சமயவர்தன, மற்றும் நீதியரசர் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 21 வழக்குகள் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் உயர் நீதிமன்றம், மார்ச் 30 சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாட வேண்டும் என உத்தரவிட்டதுடன் இதன் மூலம் இந்த வழக்குகளுக்கு தீர்வைக் காண முயற்சி செய்யலாம் எனக் கருதப்பட்டது.

அதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில், மேலதிக மன்றாடியார் நாயகம் கனிஷ்கா டி சில்வா பாலபடபெந்தியை பிரதிநிதித்துவப் படுத்தியும் 20 வழக்குகளில் மனுதாரர்களின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர், ஒரு மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெஃப்ரி அழகரத்தினம், வழக்கறிஞர்கள் கே. குருபரன் மற்றும் இல்ஹாம் காரியப்பர் ஆகியோர் ஏனைய மனுதாரர்களின் சார்பில் பிரசன்னமாகியிருந்தார்கள்.

இதன் போது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்ட விடயங்களாவன,

1. பிறப்புச் சான்றிதழ்களால் ஏற்பட்ட நிராகரிப்புகள். (சான்றுபடுத்தப்பட்ட நகல்களுக்கு பதிலாக உண்மையான புகைப்படநகல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.)

2. சத்தியப்பிரமாணங்களில் ஏற்பட்ட குறைபாடுகளாலான நிராகரிப்புகள். (சில பிழைகள் அல்லது தேவையான தகவல்களின் குறைவுகள்)

3. மற்ற ஏதேனும் நிராகரிப்பு காரணங்கள்.

குறித்த கலந்துரையாடலின் முடிவில், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “பிரஸ்தாப கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், பிறப்புச் சான்றிதழின் புகைப்படநகல்களுக்கான நிராகரிப்பு, அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என தாம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் இறுதி நிலைப்பாடு ஏப்ரல் 1ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

9 கிலோ கஞ்சா கலந்த மாவாவுடன் இருவர் யாழில் கைது..!

0

யாழ் நகரில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வழிகாட்டலில் உதவி பொலிஸ் பரிசோதகர் நந்தகுமார் குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைதான 40 வயது மதிக்கத்தக்க இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருணாவின் கூற்றால் கவலையில் பிரித்தானிய அரசாங்கம் – சாணக்கியன்

0

பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தமையால் பிரித்தானியா கவலையடைந்துள்ளதாக சாணக்கியன் கேலி செய்யும் வகையில் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,

கருணாவின் பேச்சுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள்.

ஆனால் இதை சொல்லியாக வேண்டும், கருணா இங்கிருந்து கொண்டு பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று கூறியுள்ளார். இதனால் பிரித்தானியா கவலையடைந்துள்ளதாம்.

உங்களுக்கே தெரியும் யார் மொக்கை என்று என கூறியுள்ளார்.

தலைப் பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள் – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

0

கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப் பெற்றன. எனவே நாளை 31ஆம் திகதி திங்கட்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு சிஐடி அதிரடி அழைப்பு..!

0

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி, வரும் திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு காவல்துறை சார்ஜென்ட் இறந்தது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ஒரு குழு கைது செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேசபந்து தென்னகோனைத் தவிர மற்ற சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக, இவ்வாறு விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

இலங்கை இளைஞர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

0

இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர். இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதனால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு பொது மக்களுக்கு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார தரவுகளுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவர்களில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமல் இருப்பதால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இதில் சுமார் 4,000 பேர் ஆண்டு தோறும் உயிரிழப்பதாகவோ அல்லது ஊனமுற்ற நிலைக்கு ஆளாவதாகவோ சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதேபோல், நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் மக்கள் தொகையில் 20% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41% பேர் சிகிச்சை பெறுவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

யாழில் வீதியில் சென்ற குடும்பப் பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

0

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 14ஆம் வட்டாரத்தை சேர்ந்த சி.வசந்தா (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பெண் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதன் போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் புங்குடுதீவு வைத்திய சாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(29) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!