Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 108

தமிழக முகாமில் இருந்து வந்தவர் கைது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்..!

0

சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை கைது செய்ய பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அகதிமுகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களிற்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழக அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்புபட்டவர்கள் இது குறித்து செயற்பட்டிருந்தால் யுத்தத்தின் பின்னர் இந்த சட்டத்தை மாற்றியிருக்கலாம். அமைச்சர் ஆனந்த விஜயபாலவுடன் கதைத்தேன் அவர் இந்த சட்டத்தை மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

இது எமது அரசாங்க கொள்கையில்லை,நாட்டின் பழைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தச் சட்டம் மாற்றப்படும்.

தமிழரசு கட்சியுடன் கொள்கை ரீதியாக இணக்கம் இல்லை – கஜேந்திரகுமார் எம்.பி

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர், செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

உள்ளுராட்சித் தேர்லில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்துக்கு ஓர் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

மக்களின் குறித்த ஆணையை மீறும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. இதனை செயற்படுத்துவதற்கான மிக முக்கியமான பொறிமுறை, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதே.

மாறாக கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு மாறாக சபைகளில் ஆட்சியைப்பதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை.

கொள்கையை விட்டுக் கொடுத்து ஆட்சி அமைக்க வேண்டிய எந்தத் எமக்கு இல்லை. இதற்கு மாறாக குறித்த உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்ட கட்சிகளுக்கு தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான ஆதரவு வழங்குவது என ஒருதலைப் பட்சமாகவே நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

எவ்வாறாயினும், துரதிர்ஷ்டவசமாக இன்றைய சந்திப்பில் கொள்கை ரீதியான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு..!

0

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று(31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இம்முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மே மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நாட்டில் தற்போது,

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் – 293 ரூபா
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் – 341 ரூபா
ஒட்டோ டீசல் லீற்றர் – 274 ரூபா
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் – 325 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மன்னார், வங்காலையில் கடலரிப்பு; நிலமையை நேரடியாகச் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி..!

0

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 27.05.2025 நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளைக் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கீராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு இவ்விடயம் அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப் பட்டதையடுத்து, அவர் இவ்வாறு நிலமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

ஏற்கனவே கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப் போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்க முடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்க முடியமென மக்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டு சென்று, தடுப்பணை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

வடகிழக்கு காணி அபகரிப்பு மீளப்பெறல்; : வெளியாகிய அறிவிப்பு..!

0

கடந்த (2025.03.28) ஆம் திகதி, தமிழர் காணிகள் உரிமை கோரப்படாவிட்டால் அரச காணிகளான பிரகடனப்படுத்துவது தொடர்பில் வர்த்தமானியொன்று வெளியாகி இருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் அரசியல் பரப்பில், மக்கள் மத்தியில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் தேசிய பரப்பில் அதிகம் பேசப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பின் மீதான மிகப்பெரும் ஆபத்தின் அறிகுறியாக விளங்கிய வடக்கின் கரையோரப் பகுதிகளை நிர்ணயம் செய்வதற்கான வர்த்தமானி இன்று மீளப்பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

0

எதிர்வரும் நாட்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போதுள்ள மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28.05.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது..!

0

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கி அநுராதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில், இன்று பம்பலபிட்டிய பகுதியில் வைத்து துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்..!

0

எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபைத் தலைவரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்தக் கோரி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

நிலையியற் கட்டளையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கடந்த 20 ஆம் திகதி சபாநாயகரின் அனுமதியுடன் செயல்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் எழுந்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்ய அரியரத்ன, சபாநாயகர் வழங்கிய அனுமதியை எதிர்த்தும், நிலையியற் கட்டளையை எதிர்த்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும், இது சபாநாயகரின் விருப்புரிமையை தெளிவாக கேள்விக்கு உள்ளாக்கியதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட அறிக்கை, நிலையியற் கட்டளை 91 (h) ஐ மீறுவதாக சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பிமலின் ஜனாதிபதி நிதியை மோசடி செய்து ஏழை மற்றும் அப்பாவி மக்களின் பணத்தைத் திருடிய நபர் என்ற அறிக்கையின் மூலம் தயாசிறி ஜெயசேகரவின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும், அதிலிருந்து சில பகுதிகள் பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10வது நாடாளுமன்றம் தொடங்கியதிலிருந்து தற்போதைய சபைத் தலைவரின் செயல்களும் நடத்தையும், முன்னோடி சபைத் தலைவர்களின் எடுத்துக்காட்டுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக இருப்பதாகவும், எனவே, 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுக் கொள்கிறார்கள் என்றும் அந்தக் கடிதம் மேலும் கூறப்பட்டுள்ளது.

“இது புண்ணிய பூமி” முள்ளிவாய்க்காலில் சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு..!

0

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், பேஸ்புக் காணொளி ஊடாக பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் இருக்கின்றோம். இது ஒரு புண்ணிய பூமிபோன்று தெரிகிறது. உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர்.

ஆனால் கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் இந்த புண்ணிய பூமியில், இடம்பெற்ற இறுதிப் போரின் போது, ஐக்கிய நாடுகளின் சபை தகவலுக்கமைய 70,000 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கமைய 150,000 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெறும் அப்பாவி குடிமக்களே கொல்லப்பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத மக்கள் இங்கு வருகை தந்து அவர்களை நினைவு கூறுகின்றனர்.

இந்நிலையில், தெற்கில் உள்ளோர் வடக்கிற்கு செல்ல மே 18 ஆம் திகதியே சிறந்த நாள் என்று” அவர் மேலும் கூறியுள்ளார்

உயிரை மாய்த்த மாணவி விவகாரம்; விசாரணையை புறக்கணிக்கும் அதிபர், ஆசிரியர்..!

0

கொழும்பு கொட்டாஞ்சேனையில் பாடசாலை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் பாடசாலையின் அதிபரிடமும் ஆசிரியரிடமும் விளக்கம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் இற்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பம்பலபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் குறித்த மாணவி கல்விகற்ற பாடசாலை அமைந்துள்ள கல்வி வலய அதிகாரிகளிடம் இந்த அறிக்கைகள் கோரப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் அதிபரும், உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியை துஷ்பிரயோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரும் கலந்து கொண்டிருக்கவில்லை.

அவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமைக்கான காரணம் தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குறித்த விடயத்தினை ஏனைய தரப்பினர் சவாலுக்கு உட்படுத்த முடியுமா? என்ற வினா எழுகின்றது.

error: Content is protected !!