Sunday, July 19, 2026
Huis Blog Bladsy 113

இரா.சம்பந்தர் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு..!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இரா.சம்பந்தர் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக் கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகரசபை முதல்வர் க.செல்வராஜா, பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெ.சுரோஸ்குமார், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் பிரகலாதன், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகளால் அதிர்ச்சி..!

0

தற்போது வரை செம்மணியில் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (06) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் (04) தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.’

இந்தநிலையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்தோடு, அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் (06) ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதிலும் எலும்புகள் காண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு தொடருந்து சேவை நேரங்களில் மாற்றம்; வெளியாகிய புதிய அறிவிப்பு..!

0

வடக்கு தொடருந்து சேவைகளின் இயக்க நேரங்களை மாற்றியமைக்க இலங்கை தொடருந்துகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வடக்கு தொடருந்து பாதைகளில் பயணிக்கும் பொது மக்களின் கடுமையான கோரிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து, நாளை (07) முதல் கல்கிஸ்ஸைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தினமும் இயக்க தொடருந்து திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன் துறைக்கு தினமும் காலை 05.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி தொடருந்தின் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்பட்டுள்ளது.

யாழ்தேவியின் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் காலை 06.40 மணியாக திருத்தப்பட்டுள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகளில் நிதி அறவீடு; கல்வி அமைச்சின் அறிவிப்பு..!

0

பல்வேறு விழாக்களுக்காக பணம் வசூலிப்பது குறித்து சில அரச பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்த விசாரணை குழுக்கள் அனுப்பப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கல்வி,உயர் கல்வி,தொழிற்கல்வி அமைச்சின் பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சினால் இதுபோன்ற செயல்களைத் தடைசெய்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இருந்த போதிலும், பெற்றோரிடமிருந்து இதுபோன்ற பணம் வசூலிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பல்வேறு நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது..!

0

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினரால் இன்று (06) திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு பல்கலைக் கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்த வழக்கு உள்ளடங்கலாக இளைஞர் யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

யுத்தகாலத்தில் கிழக்கு தமிழ் மக்களால் அச்சத்துடன் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று இனியபாரதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையில் உள்ள தமிழ் உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம்..!

0

சிறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது.

இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை உணர்வுபூர்வமாய் மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நாம் மறந்து விடலாகாது.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதிகளில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான எமது உறவுகளை நினைவேந்துவதுடன், 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்று வரை சிறைக் கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

‘ஜூலைக் கலவரத்தின் சிறைப் படுகொலை நாளான ஜூலை 25ம் திகதியை முன்னிறுத்தி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது.

எதிர்வருகின்ற, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று, ” ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச் சேர்ப்போம் என தெரிவித்தார்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு 478,182 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குருவிட்ட பகுதியில் 25 வயது யுவதி கொலை; 17 வயது காவாலி கைது..!

0

குருவிட்ட பகுதியில் நேற்று முன்தினம் (03) இருபத்தைந்து வயது யுவதியின் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதினேழு வயது இளைஞரை குருவிட்ட பொலிசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இந்த யுவதியின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர், ‘செபி’ என்ற பொலிஸ் நாய் வழங்கிய துப்பின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட யுவதியின் உடலுக்கு அருகில் காணப்பட்ட ஒரு தடித் துண்டை ‘செபி’ என்ற அதிகாரப்பூர்வ நாய் மோப்பம் பிடிக்க வைத்த பிறகு, அந்த நாய் சம்பவ இடத்தில் கூடியிருந்த பொது மக்களிடம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் இருந்த பதினேழு வயது இளைஞனை ‘செபி’ அணுகிய போது, ​​அது அவரது கால்களை நக்கி, அவருக்கு அருகில் படுத்துக் கொண்டது. இது பொலிசாரின் கவனத்தை ஈர்த்தது.

பின்னர் சந்தேக நபர் குழுவிலிருந்து பிரிக்கப்பட்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் வைக்கப்பட்டார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பொலிசார் அந்த தடித்துண்டை நாயிடம் மோப்பம் பிடிக்க கொடுத்த போது, அது முச்சக்கர வண்டிக்குச் சென்று சந்தேக நபரை சரியாக அடையாளம் கண்டது. இந்த அடையாளத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் குருவிட்ட காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இளம் பெண்ணைப் பார்த்த சந்தேக நபர், அவருடன் காதல் உறவு கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். யுவதி அதை உறுதியாக நிராகரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 17 வயது இளைஞன், யுவதி கொன்றது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்குப் பிறகு, சந்தேக நபர் யுவதி அணிந்திருந்த தங்க நெக்லஸைத் திருடி தப்பிச் சென்றுள்ளார், மேலும் அவரது மொபைல் போன் அருகிலுள்ள பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் புதிய பகுதியில் மண்டையோடு அடையாளம்..!

0

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியில் இருந்து இன்று மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதிகளில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய யாழ் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமாகின.

இந்நிலையில் நேற்றைய அகழ்வின்போது அந்தப் பகுதியில் சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய அகழ்வில் மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டது. அதனை அகழ்ந்து எடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்குமூலம் வழங்கும் நபர்களுக்கான புதிய சுற்றுநிரூபம் வெளியீடு..!

0

ஏதேனுமொரு முறைப்பாடு சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவதற்காக ஒருவரை அழைக்கும்போது முறைப்பாட்டில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் குறித்த நபருக்கு தெளிவுபடுத்த வேண்டிய விதம் குறித்து வழிகாட்டல்களை வழங்கும் சுற்றுநிரூபம் பதில் பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிரூபம் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி நிபுணரான விதுர ருலபனாவ என்பவரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று(04) அழைக்கப்பட்ட போதே சட்ட மாஅதிபர் மன்றுக்கு இதனை தெரியப்படுத்தினார்.

அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு இன்று(04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டுமென குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவரினால் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டதாக மனுதாரர் மன்றில் குறிப்பிட்டார்.

பின்னர் தமக்கு எதிரான முறைப்பாடு என்ன என்பது தொடர்பிலும் அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்ன என்றும் பொலிஸாரிடம் தாம் வினவிய போதிலும் அதற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்ததாகவும் மனுதாரர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவ்வாறு தகவல் வழங்க மறுப்பு தெரிவித்ததன் ஊடாக பிரதிவாதியான பொலிஸ் அதிகாரிகள் தமது அடிப்படை உரிமையை மீறியதாக தீர்ப்பளிக்குமாறு கோரி மனுதாரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்ட கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வழங்கிய சமர்ப்பணங்களுக்கு அமைய சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டு நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பில் தாம் திருப்தி அடைவதாகவும் இதற்கமைய மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்ய முடியுமெனவும் மனுதாரர் சார்பில் ஆஜராக சட்டத்தரணி நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.

இதற்கமைய மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்த மனுவில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர், அந்த பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை அல்லது சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கின்ற போது, 

பொலிஸ் தான்தோன்றித்தனமாக, எவ்வித விபரங்களையும் வெளியிடாமல், “விசாரணைக்கு வாருங்கள்” என அறிவிப்பது அன்றாடம் நடைபெற்று வருகின்றது. அறிவித்தலில் விசாரணை குறித்து போதுமான விபரங்கள் வழங்கப்படாதவிடத்து, அது தொடர்பில் அறிவியுங்கள்.

பல சந்தர்ப்பங்களில், தொல்பேசியினூடாக இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அழைக்கின்ற பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரையோ, விசாரணை தொடர்பான விபரங்களையோ வழங்காது, குறித்த திகதியில், குறித்த நேரத்திற்கு, குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவிப்பதனை நடைமுறையாகப் பின்பற்றி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரியின் பெயர், அவரது தொடரிலக்கம், விசாரணை குறித்த விடயங்கள் ஆகியவற்றை வழங்காதவிடத்து அத்தகைய அழைப்புகளை உதாசீனம் செய்யுங்கள். இவ்வாறான அழைப்புகள் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் காரணமாகவும், மற்றத் தரப்பினருடான பொலிஸினுடைய ‘உறவின்’ காரணமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய வழிகாட்டுதல்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன:

1. சந்தேக நபர்களுக்கு அழைக்கப்படும்போது குறிப்பிட்ட குற்றங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

2. சாட்சிகளுக்கு அவர்களின் வாக்குமூலத்தின் நோக்கம் மற்றும் வாக்குமூலத்திற்கும், முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணைக்குமான பொருத்தப்பாடு (relevance) குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

3. சந்தேக நபர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத காரணங்களுக்காக அழைக்கப்பட்ட நபர்களுக்கு கோரிக்கைக்கான போதுமான காரணம்/பின்னணி வழங்கப்பட வேண்டும்.

4. தொலைபேசி மூலம் அழைப்பணை (summons) அனுப்பப்பட்டால், பொறுப்பதிகாரி மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

5. விசாரணை தொடர்பான தகவல்களை முறைப்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத பிற தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளும் போது, ​​குறிப்பாக அவைவாறு தகவல்களைப் பகிர்தல் வழக்கினைப் பாதிக்கக் கூடும் என்றால், அதிகாரிகள் இரகசியத் தன்மையைப் பேண வேண்டும்.

error: Content is protected !!