Tuesday, May 5, 2026
Huis Blog Bladsy 122

வவுனியாவை சேர்ந்த இருவர் முல்லைத்தீவில் கைது..!

0

வவுனியாவை சேர்ந்த இருவரை முல்லைத்தீவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியாவில் இருந்து இரு நபர்கள் கஞ்சாவினை கொள்வனவு செய்வதற்காக புதுக்குடியிருப்பு நோக்கி வந்துள்ளனர். இவர்களுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வியாபாரிகள் பேரம் பேசியுள்ளார்கள்

இந்நிலையில், இரண்டு கிலோ வரையான கஞ்சாவினை எடுத்துக்கொண்டு மீண்டும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கற்சிலை மடுப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் போது மீட்கப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் கையூட்டல் கோரிய சமுர்த்தி அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறை..!

0

ஏழு வயதுடைய சிறுமி ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதிக்கான அனுமதியை வழங்குவதற்காக அவரின் தாயிடம் பாலியல் கையூட்டல் கோரிய திவிநெகும அபிவிருத்தி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதிவாதியின் வாக்களிக்கும் உரிமை உள்ளிட்டவை நீக்கப்படுவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாலியல் கையூட்டல் பெறும் நோக்கில் குறித்த தாயை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அழைத்த நிலையில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவருக்கு 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தமது தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதி ஒரு அரச அதிகாரியாக தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்காகப் பாதிப்படைந்துள்ள பெண் ஒருவரிடம் பாலியல் கையூட்டல் கோரியதை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு சிறிய அளவான தண்டனையை அறிவிக்க முடியாது எனவும் அதற்கமைய அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார்.

ரஷ்ய தூதரக வெடிகுண்டு விவகாரம்; LAP-TOP பாஸ்வேட்டை தர மறுக்கும் ஜேர்மன் பெண்..!

0

கடந்த ஏப்ரல் 28ம் திகதி, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள், கொழும்பு பொலிசாரை தொடர்பு கொண்டு வெடிகுண்டு அச்சம் இருப்பதாக தெரிவிக்க. அங்கே பொலிசார் மோப்ப நாய்கள் குவிக்கப்பட்டது.

ராணுவத்தினரும் உதவிக்கு விரைந்தார்கள். ரஷ்ய தூதரகத்தில் விட்டுச் செல்லப்பட்ட லாப்-டொப்பே இதற்கு காரணம்.

அதில் வெடி குண்டு இருக்கலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் சந்தேகம் அடைந்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. குறித்த லாப்-டொப் ஒரு ஜேர்மன் பிரஜையுடையது என்பது சினமன் கார்டன் பொலிசார் கண்டறிந்து அந்தப் பெண்ணை நேற்று கைது செய்து சுமார் 5 மணி நேரம் விசாரித்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் அந்தப் பெண் பேச மறுத்த காரணத்தால். ஜேர்மன் பாஷை தெரிந்த நபரை அழைத்து வந்து விசாரணை செய்யவேண்டிய நிலைக்கு பொலிசார் தள்ளப்பட்டனர்.

எனினும் எவ்வளவு கேட்டும் அவர் லாப்-டொப்பின் பாஸ்வேட்டை தர மறுத்து விட்டார். மேலும் தொடர்ந்து வெளிநாட்டு பிரஜை ஒருவரை கைது செய்து வத்திருக்க முடியாது. இதனால் பொலிசார் அவரை விடுவித்துள்ள நிலையில், அந்த லப்-டொப்பில் என்ன இருக்கிறது என்று ஆராய முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த ஜேர்மன் பிரஜை , ஏதாவது ஒரு நாட்டு உளவாளியாக இருக்க சந்தர்பம் உள்ளது என்ற கோண்டத்தில் பொலிசார் விசாரணைகளை தொடர்ந்து நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பல்கலைக் கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்..!

0

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் Online ஊடாக பல்கலைக் கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(09) முதல் ஆரம்பமாகின்றது.

WWW.UGC.AC.LK எனும் இணையத்தள முகவரியின் ஊடாக இதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்பின்னர் பதிவு நடைமுறையின் போது தெரிவு செய்யப்பட்ட பல்கலைக் கழக விருப்ப ஒழுங்கை மாற்றியமைப்பதற்காக மாத்திரம் இரண்டு வார அவகாசம் வழங்கப்படவுள்ளது.

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை பல்கலைக் கழகங்களுக்கு 43,300 மாணவர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கொழும்பு பாடசாலை ஒன்றில் மாணவனின் காலை உணவில் கஞ்சா..!

0

கொழும்பு கடவத்தை பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் காலை உணவுக்காகக் கொண்டு உணவில் இரண்டு பொதி கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது மாணவன் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குறித்த பாக்கெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து வகுப்பு ஆசிரியருக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னரே விடயம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து ஆசிரியர் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கியதாகவும், அதன் பின்னர் உணவை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட உணவானது பேக்கரி பொருட்கள் விற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து வாங்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் பேக்கரி பொருட்களை விற்பனை செய்கிறேன் என்ற போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வேறு ஒரு நபருக்கு வழங்கப்படவிருந்த கஞ்சாப் பொதி அடங்கிய உணவே தவறுதலாக குறித்த மாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மர்ம மரணம்; உடலில் காணப்பட்ட காயங்கள்..!

0

பசறை பொலிஸ் பிரிவின் உடகம பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி நேற்று இரவு சுகவீனம் காரணமாக பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்று பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பசறை உடுகம பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமி என தெரிய வந்துள்ளது.

இந்த சிறுமி சுமார் ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் சளிக்கு பல சந்தர்ப்பங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவமனையின் மருத்துவர், அவரது உடலில் காயங்களின் அறிகுறிகள் இருப்பதாக கூறியதால், பொலிஸார் இந்த மரணத்தை சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றனர்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவி ஹம்சிகா விவகாரத்தின் போக்கு; பிரதமர் வலியுறுத்தும் விடயம்..!

0

சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (09) கருத்து வெளியிடும் போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒரு சிறுமிக்கு தற்கொலை செய்வது என்ற எண்ணம் வருவது, ஒரு சமூகமாக நாம் அனைவரும் தோல்வியடைந்த ஒரு தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்கக் கூடாது என்றும், கொட்டாஞ்சேனை சிறுமி சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் அடிப்படையாகக் கொண்டு தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, குழந்தைகள் குற்றங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு அனுர அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்..!

0

அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன்களை வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று (09) வெளியிட்டுள்ளது.

சுற்றிக்கையின் படி, அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன்களை வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பை தற்போதைய ரூ. 250,000/- இலிருந்து ரூ. 400,000/- ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வாக்குக்காக நாங்கள் கசிப்பு வழங்கவில்லை; சிறிதன் எம்பி பாராளுமன்றில் காட்டம்..!

0

தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.

தனிநபர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்தில் சிறிதரன் இதனைத் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி கசிப்பை வழங்கி வெற்றியீட்டியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று(8) நாடாளுமன்றில் தெரிவித்திருந்ததாக சிறிதரன் குறிப்பிட்டார்.

அதோடு ஒருபோதும் தமிழரசுக் கட்சி இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது என சுட்டிக்காட்டினார்.

மேலும் பணம் வழங்கி வாக்குகளைப் பெற்ற தரப்பினரும் தாம் இல்லையென சிறிதரன் காட்டமாக குறிப்பிட்டார்.

மாணவி உயிரிழந்தமை தொடர்பில் பாடசாலையின் ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை..!

0

மாணவி உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகத்திற்கிடமான அரசாங்க பாடசாலையின் ஆசிரியர் ஒருவருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று (09) மாலை தெரிவித்ததாவது,

இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் ‘பி’ அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது பணி பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக அமைச்சினால் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!