Wednesday, March 4, 2026
Huis Blog Bladsy 125

அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு..!

0

மஸ்கெலியாவில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

நேற்றைய தினம் சிறுமியின் வாய் பகுதியில் நுரை வருவதை கண்ட பெற்றோர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க கொண்டு சென்றுள்ளனர்.

இதன் போது, சிறுமியை பரிசோதித்த மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளாரென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் சடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் சடலம் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை வைத்தியசாலை மனநல விடுதியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த யுவதி துஸ்பிரயோகம்..!

0

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவருடன் பாலியல் உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டில், வைத்தியசாலையின் துப்புரவு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிசாரால் சந்தேக நபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் சந்தேகநபர் கூறியதாகவும், இதையடுத்து அவர்களுக்குள் வைத்திய சாலை வளாகத்துக்குள்ளேயே பாலியல் உறவு ஏற்பட்டதாகவும் யுவதியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு திருமணம் நிகழ்ந்து, குழந்தைகள் உள்ளதையும் அவர் யுவதியிடம் மறைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், வைத்திய சாலையின் ஏனைய சிலருடன் பேசிய யுவதி, அந்த நபரை காதலிக்கலாமா என வினவியதாகவும், அந்த நபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள விவகாரத்தை அவர்கள் குறிப்பிட்ட பின்னர், யுவதி இந்த விவகாரத்தை விடுதிக்கு பொறுப்பான வைத்தியரிடம் முறையிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து, யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டு, அறிக்கையிட்டதை தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் உள்ள பெண்கள் விடுதியை, ஆண் துப்புரவு பணியாளர் ஒருவர் சுலபமாக அணுகும் விதத்தில் இருந்தமை பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அனுராதபுர வைத்திய சாலையில் பெண் மருத்துவர் பாலியல் துஸ்பிரயோகம்..!

0

அனுராதபுரம் வைத்திய சாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னதாக கருத்துரைத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுராதபுரம் வைத்திய சாலையில், திங்கட்கிழமை (10) இரவு கடமையில் இருந்த பெண் வைத்தியரை கத்தியை காண்பித்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்றார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் வைத்திய சாலையில் கடமையாற்றுவோர், வேலைநிறுத்த போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பாதிக்கப்பட்ட வைத்தியர் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பழிக்கு பழி” பெண்களை நிர்வாணப்படுத்தி சிரியாவில் நடக்கும் கொடூரம்..!

0

சில காலமாக சிரியாவில் அமைதி மெல்லத் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், இப்போது அங்கே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஆளும் தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் கடந்த இரண்டு நாட்களில் 1000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியாக மோதல் போக்கே நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா இடையே சில காலமாகவே மோதல் நிலவி வந்தது. இப்போது தான் இஸ்ரேலில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இதற்கிடையே இப்போது திடீரென சிரியாவில் வன்முறை வெடித்துள்ளது.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள சிரியாவில் கடந்த 14 ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுப் போர் தொடர்கிறது. அங்கு பஷர் அல் அசாத் என்பவரே கடந்த 2000ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு எதிராகப் பல முறை கிளர்ச்சி வெடித்தது. இருப்பினும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் அவர் அதை முறியடித்தே வந்தார். இடையில் 2020ம் ஆண்டு அங்கு முக்கிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு அங்குச் சற்று அமைதி திரும்பியிருந்தது.

இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் அங்கு மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஹெச்டிஎஸ் எனப்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவினர் ஆட்சியைப் பிடித்த நிலையில், அசாத் ஆட்சி 24 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு சிரியாவில் மெல்ல அமைதி திரும்பிக் கொண்டு இருந்தது. நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் இப்போது அங்கு மோதல் வெடித்துள்ளது.

சிரியாவில் தற்போதுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் ஜனாதிபதி பஷார் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் வெடித்துள்ளது. தொடர்ச்சியாக நடக்கும் இந்த சண்டைகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிரியாவில் கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்த போதிலும், இந்தளவுக்கு வன்முறை எப்போதும் நிகழ்ந்ததே இல்லை என குறிப்பிடுகிறார்கள்.

அங்கு கொல்லப்பட்டவர்களில் சுமார் 750 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். அவர்களும் கூட மிக அருகில் நெருக்கமான தூரத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர அரசு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 125 உறுப்பினர்களும், அசாத் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 148 பேரும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடக்கும் நிலையில், லடாகியா நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அசாத் ஆட்சியில் இருந்த போது எண்ணற்ற கொடுமைகள் அரங்கேறின. அப்போதும் கூட அசாத்துக்கு ஆதரவாகவே அலவைட் சிறுபான்மை பிரிவினர் இருந்துள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்கும் நோக்கில் தற்போதுள்ள ஆட்சிக்கு ஆதரவான சிலர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் உயிரிழந்தனர். அதன் பிறகு அசாத் ஆதரவாளர்களும் பதிலடி தாக்குதலை ஆரம்பித்ததே இந்த வன்முறைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு விரைவாக எடுத்த நடவடிக்கைகளால் மோதல் சற்று முடிவுக்கு வந்துள்ளது.

இந்த மோதலின் போது பெண்களுக்கு எதிராக சில மோசமான சம்பவங்களும் நடந்துள்ளன. சில பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து பெண்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த வன்முறையால் இரு நாட்களில் மட்டும் 1000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்; சபையில் சாடிய அர்ச்சுனா எம்.பி..!

0

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைத்தியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட போதும் கடந்த 2 வருடங்களாக இடமாற்றம் பெற்றுச் செல்லாமல் தொடர்ந்தும் அங்கேயே பணியாற்றுவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த வைத்தியர் செல்வாக்கைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செல்லாமல் இருப்பதாகவும் அர்ச்சுனா இதன் போது சுட்டிக் காட்டினார்.

வைத்தியர் இடமாற்றமாகி செல்லாததனால் மன்னார் வைத்திய சாலையில் குழந்தைகளுக்கான வைத்தியர் இன்றி அந்த மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வைத்தியரை விரைவாக இடமாற்றுமாறு சுகாதார அமைச்சரிடம் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னகோனை உடன் கைது செய்ய இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

0

பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி)தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய மாத்தறை நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) விடுத்த கோரிக்கையின் பேரில் இன்று(11) இந்த திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்டமுன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக அவர் தேடப்படுகிறார்.

இதற்கிடையே தென்னகோன், மாத்தறை நீதிபதியின் கைது உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, தென்னகோன் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்தால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தேசபந்து தென்னகோன் தொடர்பான ஏதேனும் தகவல்களை வழங்குமாறு காவல்துறை பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் பணி சி.ஐ.டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் – மஹிந்த ஜயசிங்க

0

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு நிருபம் சமர்ப்பிப்பார்.

அதனைத் தொடர்ந்து கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். வெகுவிரைவில் முரண்பாடற்ற வகையில் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு தயாரிக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கல்விக்கு என்றும் முன்னுரிமை வழங்குவோம் என்பதை அதிகாரத்தில் இல்லாத போதும் குறிப்பிட்டோம், தற்போதும் அதே நிலையில் உள்ளோம். இந்த ஆண்டு ஆசிரியர் சேவையில் 7913 நியமனங்கள் வழங்கப்படும்.

அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சேவை தொடர்பில் குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே செயற்பட முடியும்.

அதிபர் சேவையில் 1610 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் நிர்வாக மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதேபோல் கல்வி நிர்வாக சேவையில் 1331 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் 422 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பதவிக்கான பரீட்சை நடைபெற்றது. இருப்பினும் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

ஆசிரியர் கல்வி சேவையில் 1310 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் முதல் கட்டமாக 706 பேருக்கு நியமனங்களை வழங்குவற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் இழுபறி நிலையில் இருந்த விடயங்களை நாங்கள் துரிதப்படுத்தியுள்ளோம்.

கடந்த காலங்களில் பெரும்பாலான பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் என்று பெயர் பலகைகளில் ஊடாக மாத்திரம் அறிவிக்கப்பட்டது.இருப்பினும் எவ்வித வளங்களும் வழங்கப்படவில்லை. அனைத்து பாடசாலைகளுக்கும் இணையான வளங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பொய்யுரைத்தார்கள். பி.சி பெரேரா ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக 1997 ஆம் ஆண்டு ஆசிரியர் – அதிபர் சேவை சம்பள முரண்பாடு ஆரம்பமானது. 27 ஆண்டுகாலமாக இந்த பிரச்சினை தொடர்கிறது. 8 ஆண்டுகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியும், 19 ஆண்டுகாலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இந்த நாட்டை ஆட்சி செய்தது.இருப்பினும் இந்த முரண்பாட்டுக்கு தீர்வு காணவில்லை.

நாங்கள் தொடர்ந்து போராடினோம் . 2021 ஆம் ஆண்டு 121 நாள் போராட்டத்தில் பின்னரே ஒரு பகுதியளவிலான வெற்றியை பெற்றுக் கொண்டோம். 1994 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பினை தயாரிக்கையில், பல நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டு அவை முழுமைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், அமைச்சரவை பத்திரம் ஊடாக தற்காலிக தீர்வுகள் எடுக்கப்பட்டன.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு நிருபம் சமர்ப்பிப்பார்.அதனைத் தொடர்ந்து கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள தமிழ்பொறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமசங்கர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்பு..!

0

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்று (11) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கிறார்.

கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே நாளை காலை 9 மணிக்கு பதவியேற்கின்றனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார்.

1967ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலையில் அன்னலிங்கம் (முன்னாள் அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளர்) மகாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறந்தார்.

துன்னாலை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டத்துறையில் கல்வி கற்று சட்டத்தரணியானார்.

1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவக்கச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் (போர் இடம்பெற்ற காலப் பகுதியில்) மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ் என யாழ் மாவட்டத்தில் அனைத்து நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார்.

சுமார் 14 ஆண்டுகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அன்னலிங்கம் பிரேமசங்கள் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றினால் அதிகரிக்க முன்னர்) பின்னர் 2013ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக பதவி வகித்ததுடன் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு என மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் முதல் நிலை நீதிபதியாகத் தொடர்ந்த நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தலைமை நீதியரசர் முறுது பெர்னான்டோ தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையுடனும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்படுகிறார்.

2000ம் ஆண்டு பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிவானாக செயற்பட்ட காலத்தில் மிருசுவிலில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப் பேரை சுட்டு படுகொலை செய்த வழக்கின் விசாரணைகளை உரிய வகையில் முன்னெடுத்தமைக்காக அந்த வழக்கின் தூக்குத் தண்டனை பெற்ற இராணுவச் சிப்பாயின் மேன்முறையீட்டை விசாரணை செய்து தூக்குத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கருக்கு பாராட்டை கோடிட்டுக் காட்டியிருந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள தமிழ்பொறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

மாணவர்களை பிரம்பால் தாக்கிய டியூஷன் ஆசிரியர்; பொலிஸார் தீவிர விசாரணை..!

0

தனியார் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகேகொடை மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் வணிக பிரிவில் கல்வி கற்பிக்கும் குறித்த ஆசிரியர், தனது தனியார் வகுப்புகளில் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஆசிரியரால் தாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரித்து வருவதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 18 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

உயர்தர வகுப்புகளில் படிக்கும் சில மாணவர்கள் 19 வயதை பூர்த்தி செய்துள்ளதால், சட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிக்கல்கள் உள்ளதாக இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள தமிழ்பொறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

அக்கரைப்பற்றில் திருட முயற்சித்து மக்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட திருடன்..!

0

அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் இன்று (10) அதிகாலை நேரத்தில் அகப்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நபரும் அவனது நண்பர்களும் இணைந்து நேற்றிரவு (09) முதல் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதிகளில் பல இடங்களில் திருட முயற்சித்துள்ள நிலையில் ஒருவன் மாத்திரம் வசமாக மாட்டிக் கொண்டார்.

குறித்த நபர் வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தை அவதானித்து வீட்டிற்குள் புகுந்து அறை ஒன்றினுள் ஒளிந்திருந்து அவ்வறையில் இருந்த பை ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகையில் அதனை அவதானித்து அவ்வீட்டின் பெண் கூச்சலிடவே அவ்விடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இருந்தபோதிலும் அயலவர்களின் முயற்சியால் பிடிக்கப்பட்ட நபரை மக்கள் நையப்புடைந்து திருடப்பட்ட பை ஒளித்து வைக்கப்பட்ட இடத்தினை காட்டுமாறு தாக்கினர்.

அடியினை தாங்கமுடியாத நபரும் குறித்த வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றருக்கு அப்பால் உள்ள வீட்டில் அவ்வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமலே மறைத்து வைக்கப்பட்ட பையினை எடுத்து கொடுத்துள்ளார்.

அத்தோடு தன்னுடன் வந்த ஏனையவர்களின் விபரத்தினையும் வழங்கியதோடு திருடிய முறை தொடர்பிலும் பொது மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைப்பது வீணற்றது எனும் கருத்தும் நிலவிய நிலையில் குறித்த நபர் இதற்கு முன்னர் திருடிய வீட்டு உரிமையாளர்களும் இணைந்து அடையாளம் காட்டியதுடன் அவர்களது ஆத்திரத்தினையும் வெளிப்படுத்தினர். பின்னர் பொதுமக்கள் நபர் ஊர்லமாக கொண்டு சென்று அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேநேரம் அநாதை இல்லங்களுக்கு நிதி அறவீடு மற்றும் ஏழைகளுக்கான நிதி அறவீடு என கூறிக் கொண்டு யாருடைய அனுமதியுமின்றி கிராமங்களுக்குள் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாடுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

error: Content is protected !!