Thursday, July 23, 2026
Huis Blog Bladsy 140

மட்டக்களப்பில் அரச ஒட்டுக் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு..!

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக் கிழமை (21) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2007ம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கி வந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங் கண்டு கொண்டதையடுத்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஸ்ரீதரனுக்கோ சுமந்திரனுக்கோ எந்த வாக்குகளையும் விடக் கூடாது..!

0

நடைபெறவுள்ள இலங்கை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமது மக்கள் வாக்களிக்குமாயின் அது தாமே தமக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நான் பாராளுமன்றுக்கு செல்வதற்கு முன்னர் எனக்கு அனுபவம் குறைவு. சென்றதன் பின்னர் தான் தேசிய மக்கள் சக்தி (NPP) இனது நிலைப்பாடு தெரிந்தது.

அதற்கு இந்த தேர்தலில் வாக்களிக்குமாயின் நாம் எங்களுக்கு வைக்கும் கடைசி உலையாக இருக்கும். யாழ் மாநகர சபை வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும். அது பிரச்சியினையில்லை.

யாழில் மட்டும் எமது வாக்காளர்கள் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தினுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறும் அருச்சுனா எம்பி கூறினார்.

மேலும் கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணாவுடன் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் ஸ்ரீதரனுக்கோ, அல்லது சுமந்திரனுக்கோ எந்த வாக்குகளையும் விடக் கூடாது என்பது எனது தெளிவான வேண்டுகோள் எனவும் அருச்சுனா எம்பி இதன் போது தெரிவித்துள்ளார்.

வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை..!

0

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியா கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் இன்று (21) கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பெற்றோர்கள் சிலரால் மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் கல்வி அமைச்சிடம் விளக்கம் கோரியிருந்தோம்.

கல்வியற் கல்லூரிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான ஆணையாளர் ஊடாக விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப் பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின் அறிக்கை சமர்ப்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; இளைஞர் ஒருவர் கைது..!

0

வவுனியாவில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததாகவும், குறித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தந்தையின் நண்பரால் பதின்ம வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்..!

0

15 வயது சிறுமியொருவர் தன் தந்தையின் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் ஒன்று தனமல்வில பகுதியில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த 19ஆம் திகதி சிறுமியின் தந்தை அண்டைவீட்டை சேர்ந்த 50 வயதுமிக்க நபருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

மது அருந்திவிட்டு, தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது, ​​சந்தேக நபர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரை பயமுறுத்தி, வீட்டின் தோட்டத்திற்கு கீழே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறிய பிறகு, தாயும் சிறுமியும் தனமல்வில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்றையதினம் கைதாகியுள்ளார்.
குறித்த நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர், 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம்..!

0

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கு சட்டமூலம் ஒன்றை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வருவதாகவும், ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சில விடயங்களை நாங்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறோம். நான் ஜனாதிபதியான பிறகு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. அதாவது, ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியமும் கிடைக்கிறது.

நான் இன்று கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் வேண்டாம் என்று. இந்த நாட்டை சரி செய்ய ஆரம்பிக்க வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு அப்படி ஒரு ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரியாது, பின்னர்தான் அது கிடைப்பது தெரிய வந்தது.

அதனால், பாராளுமன்றத்திற்கும் கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று. அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும் போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது, அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாங்கள் அதை வழங்கவுள்ளோம். அதே போல், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்குகிறோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்.” என்றார்.

எச்சரிக்கையுடன் உள்ளூராட்சி அதிகாரங்களையும் கோரும் திசை காட்டி..!

0

அரசாங்கம் ஒரு பக்கமும், உள்ளூராட்சி நிறுவனங்கள் மறு பக்கமும் இருந்தால், முரண்பாடுகள் உருவாகி குழப்பம் ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணியில் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களினது அதிகாரத்தையும் நாட்டை வழிநடத்தும் திசைக்காட்டி கொண்டிருப்பது, உள்ளூராட்சி நிறுவனங்கள் நாட்டை வழிநடத்தும் டில்வின் சில்வா சுட்டிக் காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் வேறொரு குழுவிற்கு மாற்றப்பட்டால், அரசாங்கத்தின் பணிகளை நாசப்படுத்த எதிரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கும் அரச சேவைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கும் நாட்டின் முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் மிகவும் முக்கியமானது என்றும் டில்வின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திசைக்காட்டி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் வலுவான நிலையில் இருந்ததால், உள்ளூராட்சி தேர்தலும் வெல்லப்படும் என்று தான் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

யாழில் வைத்தியர் அர்ச்சுனாவின் ஊசி சின்னம் அனைத்து இடங்களிலும் நிராகரிப்பு..!

0

யாழ் மாவட்ட வேட்புமனுத் தாக்கலில் அர்ச்சுனாவின் ஊசி.சின்னம் 17 சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அர்ச்சுனா புலம்பெயர் தமிழர்களி்டமிருந்து தேர்தலுக்காக பெருமளவான பணத்தைப் பெற்ற பின் திட்டமிட்டு தேர்தல் மனுக்களில் தவறுகளை ஏற்படுத்தி ஏற்படவுள்ள பாரிய தோல்வியை மறைப்பதற்காக குறித்த நியமனப் பத்திரங்களை நிராகரிக்க வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக சமூகவலைத் தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் சந்திரசேகரனை படிப்பறிவு இல்லாதவர் என மட்டம் தட்டிக் கதைப்பது, மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளை படிப்பறிவு இல்லாதவர்கள், திட்டமிடல் தெரியாதவர்கள் என ஏசுவது, பாராளுமன்றத்தில் தமிழ் பிள்ளைகளை விபச்சாரிகள் என கதைப்பது என அறிவாளியாக திரிந்த உமக்கு ஒரு தேர்தல் படிவம் நிரப்ப தெரியவில்லையா?? அல்லது புலம்பெயர் தமிழர்களிடமிருந்து உமக்கு தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக வந்த பணத்தை நீர் கொள்ளை அடிப்பதற்காக இவ்வாறு தேர்தல் குளறுபடிகள் செய்தீரா? உம்மை நம்பி தேர்தலில் குதித்த அந்த அப்பாவிகளின் நிலை இனி என்னவாக இருக்கும் என முகநூல்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயர் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்..!

0

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன், பொலிஸ் நிலையங்களில் உள்ள வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், பொலிஸ் அதிகாரியின் மகன் தலைமறைவாகி இருந்தார்.

அது குறித்து, யாழ் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் இன்றைய தினம் (17) சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானதை அடுத்து, அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

அதேவேளை, சந்தேக நபரின் தந்தையான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பச்சைக் குத்தினால் இனி அரச வேலை இல்லை; இலங்கையருக்கு வெளியான புதிய கட்டுபாடு..!

0

உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல். அந்த தோலை அழிப்பது நல்லதல்ல, நாம் இது தொடர்பில் ஆராய வேண்டும்.

எனவே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், உடலில் பச்சை குத்தியிருந்தால் எந்த ஆயுதப் படையிலும் இணைய வாய்ப்பு கிடைக்காது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

error: Content is protected !!