வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், கடந்த 2026.01.15 அன்று குறித்த வீட்டில் பணிப் பெண்ணாக செயற்பட்ட போது, இரவு தன்னை குறித்த சந்தேக நபர் அழைத்துச் சென்று தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் ஒன்றினை வழங்கியதும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பில் இஞ்சினியர் ஒருவரை மணம் முடித்த யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட கொழும்பில் வசித்து வந்த 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.
மாப்பிளையான இஞ்சியினர் ஓ.எல் வரையும் கல்வி கற்றவர் என்பதுடன் யாழ் தொழில்நுட்பக்கல்லுாரியில் மட்டுமே இஞ்சினியரிங் கற்றுள்ளார்.
தொழில்நுட்ப கல்லுாரியில் கல்வி கற்று வெளியேறிய மாப்பிளை அதன் பின்னர் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் கட்டட மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
இவரையே குறித்த பெண் வைத்தியரின் பெற்றோர் மற்றும் உறவுகளுக்கு இஞ்சினியர் என கூறி தலையில் மிளகாய் அரைத்து கலியாணம் கட்டி வைத்துள்ளார் புறோக்கர்.
பெண்ணின் இரு சகோதரர்களும் புலம்பெயர் நாட்டில் இருந்து விசாரித்த போதும் மாப்பிளை இஞ்சினியர் என்றே புறோக்கர் மற்றும் மாப்பிளையின் சகோதரர்களால் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று முன்தினம் கொழும்பில் நடந்த திருமண வைபவத்தின் பின் நேற்றே மாப்பிளையின் சுய விபரம் வைத்திய மணமகளுக்கு தெரிய வந்துள்ளது.
அத்துடன் மாப்பிளை 2011ம் ஆண்டு யாழில் உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிய வருகின்றது.
பெருமளவு சீதனப் பகிர்வுகளும் நடைபெற்றுள்ள வேளையில் நேற்று மாலையே மணமகள் மாப்பிளையை விட்டு பிரிந்து கொழும்பில் உள்ள அவளது பெற்றோருடன் வந்து விட்டதாக உறவுகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கவும் எதிர்வரும் தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடும் எந்தத் தடையும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சி வெறுமனே தேர்தலை மையமாகக் கொண்டு இயங்காமல் ஒரு கொள்கையை முன்வைத்த அணிதிரட்டலை மேற்கொள்ள வேண்டும் என விஸ்வலிங்கம் மணிவண்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் கூட்டணிக்கு நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைக்க வேண்டிய தேவை இருந்தது.
அதனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் அங்கு ஆட்சியமைத்தோம்.
அதேபோன்று வேறு உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். இதை மறுக்க முடியாது.
அதேநேரம், எதிர்வரும் தேர்தல்க ளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஒற்றுமையாக இணைந்து போட்டியிடுவதற்கும் எவ்வித தடையும் இல்லை.
அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது.
ஆனால் தமிழரசுக் கட்சி தேர்தல் அரசியலுக்குள் மட்டுமே சிக்கிக் கொள்ளாமல் ஒரு கொள்கையையும் ஒழுக்க நெறிகளையும் முன்னிலைப்படுத்தி ஒரு வலுவான அணி திரட்டலை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செயற்பட்டால் நாங்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் எந்தத் தடையும் இருக்காது என்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று (25) பிற்பகல் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில், அப்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்திலேயே தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.”
“அதேபோன்று நாடாளுமன்றக் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கும், நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக இரா. சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானித்தோம். நாடாளுமன்றக் குழுவின் தலைவராக எஸ். சிறீதரனை நியமித்தோம். ஒரு குழு நியமித்த பதவியை மாற்றுவதற்கான அதிகாரம் அக்குழுவிற்கே உண்டு.”
“அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக இப்பதவியை வழங்கியது. ஆனால், அவர் அரசியலமைப்புச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அரசியல் குழு இரண்டு தடவைகள் ஆலோசனை வழங்கியிருந்தது. நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்திலும் சுமார் 4 மணித்தியாலங்கள் இது குறித்து வலியுறுத்தியும் அவர் செவிமடுக்கவில்லை.”
“கட்சியின் எந்த உயர் சபை அவருக்குப் பதவியை வழங்கியதோ, அந்தச் சபையின் ஆலோசனையை அவர் நிராகரித்தால், அப்பதவியை அவரிடமிருந்து மீளப் பெறத் தீர்மானித்துள்ளோம்.” என்றார்.
எனினும், இது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் வினவிய போது, “அவ்வாறு சிறீதரனைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு இறுதித் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரல் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து இன்று வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
வவுனியா குருமன்காட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
அக் கலந்துரையாடலில்,
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2011ம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்படவிருந்த “கிவுல் ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தை எந்தவிதமான மீளாய்வுமின்றி தற்போதைய அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளமையானது தமிழ் மக்களுக்கு அதிலும் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவதாக உள்ளது.
மேற்படி திட்டத்தை நிறுத்தக் கோருவது தொடர்பான கூட்டம் இன்று (24.01.2026) வவுனியாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததுடன் இத் திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கிவுல் ஓயா திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆபத்துக்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக எதிர்வரும் 30ம் திகதி (30/01/2026) வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வை காண்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (24.01.2026) மாலை குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த கூலர்ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு தமிழ் ஊடகவியலாளர்களை அழைக்காது சிங்கள ஊடகவியாலளர்களை மட்டும் அழைக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியாவிற்கு அண்மையில் நீதித்துறை அமைச்சர் வருகை தந்திருந்ததுடன், ஊடக சந்திப்பு ஒன்றினையும் மாவட்ட செயலகத்தில் நடத்தியிருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் சிங்கள மொழி ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் தமிழ ஊடகவியலாளர் எவருக்கும் அழைப்பு வழங்கப்படவில்லை.
வவுனியா மாவட்ட செயலகத்தில் தொடர்பாடல் உத்தியோகத்தர் இருந்தும் தொடர்ச்சியாக பல நிகழ்வுகளுக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் புறககணிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் பல முறை தெரியப்படுத்தியும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், இது தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் என்பவற்க்கும் முறையிடவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த சாதாரணப் பரீட்சை நடைபெற இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று வரும் ஓ.எல் பரீட்சை எடுக்கவுள்ள 16 வயதான மாணவி படுக்கும் கட்டிலுக்கு அடியில் யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கற்று வரும் 18 வயதான ஏ.எல் மாணவன் பிடிபட்டுள்ளான். நேற்று மதியம் 3.00 மணியளவில் இச் சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
மாணவியின் தந்தை வங்கி ஒன்றில் பதவி நிலை அதிகாரி ஆவார். தாயார் அரச உத்தியோகத்தர். மூத்த மகளான குறித்த மாணவிக்கு தற்போது ஓ.எல் முன்னோடிப் பரீட்சை நடைபெற்று வருவதாகத் தெரியவருகின்றது. மாணவி பரீட்சை எழுதிவிட்டு தாயாருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.
தாயார் மாணவியை இறக்கிய பின்னர் மற்றைய மகளை பாடசாலையில் இருந்து ஏற்றுவதற்காக சென்ற போது சைக்கிளில் பாடசாலை சீருடையில் வந்த மாணவன் சைக்கிளை அருகில் இருந்த வர்த்த நிலையம் ஒன்றில் விட்டுவிட்டு நடந்து சென்று வீட்டினுள்ளே புகுந்துள்ளார். மற்றைய மகளை தாயார் வீட்டில் இறக்கிவிட்டு அலுவலகம் சென்றுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே உள்ளே சென்ற இரண்டாவது மகள் 3 மணியளவில் கத்திக் குளறி ஆர்ப்பாட்டம் செய்ததால் அயலவர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்துள்ளார்கள். அங்கு 16 வயது மாணவி படுக்கும் கட்டிலுக்கு அடியில் குறித்த மாணவன் பாடசாலை சீருடையுடன் பிடிக்கப்பட்டார்.
2வது மகளுக்கு அன்று ரியூசன் இருந்ததாகவும் ஆனால் அன்று மாணவி உடல் சுகவீனம் காரணமாக செல்லாததால் வீட்டில் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே மாணவன் இசகு பிசகாக மாட்டியுள்ளார். இரண்டாவது மகள் ஹோலுக்குள் இருக்கும் போது அறைக்குள் இருந்த கண்ணாடியை பார்த்து அதிர்ந்துள்ளார்.
குறித்த கண்ணாடியில் கட்டிலுக்கு கீழே ஒருவன் வெள்ளை ஆடையுடன் படுத்திருப்பதை கண்டே கத்தியுள்ளார்.இரண்டாவது மகள் கத்தும் போது மூத்த மகள் அவளது வாயை பொத்திப் பிடித்ததாக தெரிய வருகின்றது.
இருப்பினும் சகோதரி ஏன் இவ்வாறு தனது வாயை பொத்திப் பிடிக்கின்றார் என தெரியாது வீட்டு முற்றத்திற்கு வந்து இரண்டாவது மாணவி கத்திக் குளறியதாலேயே அயலவர்கள் உள்ளே நுழைந்துள்ளார்.
மாணவன் அங்கு வைத்து நையப்புடைக்கப்பட்டதுடன் மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அதன் பின்னர் நடாத்தப்பட்ட விசாரணையில் மாணவியும் மாணவனும் காதலர்கள் என கூறியதாகத் தெரிய வருகின்றது.
குறித்த மாணவன் யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் உயாதரம் கற்பவன் என்பதுடன் பொறியியலாளர் ஒருவரின் மகன் எனவும் தெரிய வருகின்றது.
மாணவனின் பெற்றோரும் அங்கு வரவழைக்கப்பட்டு பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கபபட்டதாகவும் மாணவனை பிடித்த போது அயலவர்கள் சிலரால் எடுக்கப்பட்ட வீடியோக்களை இரு தரப்புக்களும் சேர்த்து அழிக்குமாறு கோரியதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மாணவன் முதல் முதல் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளது மாணவன் வைத்திருந்த தொலைபேசி வட்சப் சற்றிங்கில் இருந்து கண்டு பிடிக்கபட்டுள்ளது.
மாணவி தாயாரின் சாதாரண தொலைபேசி இலக்கம் ஒன்றிற்கு லப்டொப் கணனயில் வட்சப்பை இறக்கி மாணவனுடன் நீண்ட காலமாக சற்றிங் செய்து வந்துள்ளதும் கண்டு பிடிக்கபட்டுள்ளது.
அவர்களின் சற்றிங் தொடர்புகள் மூலம் அவர்கள் தவறான புகைப்படங்களை தமக்கிடையே இன்னும் அனுப்பவில்லை என்பதும் விசாரணைகளில் இருந்தும் சற்றிங்குகளிலிருந்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
முதல் முதல் மாணவியை தனியே சந்திக்க வந்தே மாணவன் மாட்டுப்பட்டுள்ளார். தனது தங்கை மதிய போசணம் சாப்பிட்ட பின்னர் 3 மணிக்கு ரியூசனுக்கு சென்று விடுவாள் என கூறியே மாணவனை மாணவி அழைத்துள்ளதும் தனது தாயார் 4 மணிக்கு பிறகே வீட்டுக்கு வருவார் என்பதையும் தந்தை 7 மணிக்கு வீட்டுக்கு வருவார் என்பதையும் மாணவி சற்றிங்கில் குறிப்பிட்டுள்ளமையும் கண்டு பிடிக்கட்டுள்ளது.
யோகாசனம் கற்கச் சென்ற போதே இருவரும் சந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இரு மகள்களும் பாடசாலை உட்பட எங்கு சென்றாலும் தனியே செல்வதில்லை எனவும் தாய், தந்தையே அவர்களை கொண்டு சென்று இறக்கி வருவதாகவும் அவ்வாறான ஒரு நிலையிலேயே இவ்வாறு குறித்த மாணவி செயற்பட்டுள்ளது தொடர்பாக ஏனைய பெற்றோர்களும் அவதானமாக இருந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இரு தரப்பினரும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் காதலில் ஈடுபட்டவனும் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுபவன் அல்ல என்பதுடன் உயர்தரத்தில் சிறப்பு தேர்ச்சி பெறக் கூடியவன் எனவும் அறிய முடிகின்றது.
இதுவே போதைப் பொருள் காவாலிகள் போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் நிலமையை சிந்தித்துப் பாருங்கள்
பிள்ளைகளின் சகல செயற்பாடுகள் மற்றும் கைத் தொலைபேசிகள், கணனிகளை தொடர்ச்சியாக அவதானித்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வுக்கான பதிவு.
யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின் தொடர்ந்து சென்ற போதே, லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்கு உள்ளாக்கித் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் காட்சி பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது.
லொறியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டமையினால், லொறியை வீதியில் கைவிட்டு சாரதி காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேக நபர் தப்பிச் சென்று கொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் லொறியையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை நிந்தவூர் பகுதியில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த ஆபாச நடவடிக்கைகளில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய 3 தலைமறைவான சந்தேக நபர்களில், இன்று (24) வொலிவேரியன் கிராமத்தில் 36 வயது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 21-ஆம் தேதி இரவு இந்த நடவடிக்கை இடம்பெற்றது.கைது செய்யப்பட்ட நபர் குடும்பஸ்தர் என்பதும், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளைச் சேர்ந்தவர் என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சிறுமியை பாதுகாக்க விட்டு, அவர் வெளி மாவட்ட சிறுவர் காப்பகத்தில் தங்கியுள்ளார். பொலிஸார், சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.