Monday, July 20, 2026
Huis Blog Bladsy 115

பிளாஸ்டிக் பொருட்களால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..!

0

சந்தையில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மாணவர்களுக்கு புற்று நோய்கள் ஏற்படுவதாக வரத்தக வாணிபத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது தொடர்பில் இரண்டு மாதங்களில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று(3) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சந்தையில் காணப்படும் தண்ணீர் போத்தல் மற்றும் உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் தரம் குறைவானதாக உள்ளது.

அதில் சூடான நீர்-உணவுகளை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இனம் காணமுடியாத நோய்கள் உருவாகின்றன.

இவை தொடர்பில் உலகளாவிய ரீதியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது பரிசோதனைகளிலும் இது தொடர்பில் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றைக் கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களில் சந்தையில் காணப்படும் தரமற்ற பொருட்கள் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு பாவனையாளர் அதிகார சபை-கைத்தொழில் -சுகாதார -கல்வி அமைச்சுகளின் உதவியோடு நாம் கடும் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் இம்மாதம் முதல்..!

0

வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஓய்வூதியம் இம்மாதம் முதல் வழங்கப்படும் என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற 5 இலட்சத்திற்கும் அதிக அரச ஊழியர்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் மாகாண உதவிப் பணிப்பாளர் ஒருவர் கைது..!

0

ஊவா மாகாண சபையின் உதவி விவசாயப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹல்துமுல்ல பகுதியிலுள்ள அரச காணியை கையகப்படுத்தி அங்கு நடுவதாகக் கூறி 4000 மாங்கன்றுகளை அரச நிதியில் கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த திட்டத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்களை இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மன்னார் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு..!

0

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் மன்னார் வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அழைப்பாணை விடுத்தும் தவிர்த்து ஓடும் முன்னாள் அமைச்சர்கள்..!

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் நேற்று (02) லஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.

அவர் கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைகள் தலைமை ஆய்வாளர், ராஜித சேனாரத்னவுக்கு நேற்று காலை 9 மணிக்கு குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்கு முன்னிலையாகுமாறு எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

எனினும், அவரது சார்பாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, ராஜித உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், விசாரணையில் பங்கேற்க முடியாது என்றும் கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சர் விமல் வீரவன்சவும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சில கடைகளை விற்பனை செய்தது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரும் கொடுக்கப்பட்ட திகதியில் முன்னிலையாக முடியாது என்று அறிவித்து ஒரு புதிய திகதியை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இடை நிறுத்தம்..!

0

ஆசிரியர் சேவையின் தரம் 3 க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பதில் செயலாளர் எ. அன்ரன் யோகநாயகம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடங்களில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை யின் 3ம் வகுப்பு – 1(அ) தரப் பதவிக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு கடந்த 20ம் திகதி கோரப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு, இவ் ஆசிரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதில் செயலாளர் எ.அன்ரன் யோக நாயகம் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பிரிவு நியமனம் பெற்ற பலர் அதிபர், வலய பணிப்பாளர்களின் செல்லப் பிள்ளைகளாக செயற்பட்டு கணக்காய்வு நியதிகளை முழுமையாகப் புறந்தள்ளி சட்ட விரோதமாக இடை நிலை வகுப்புக்களுக்கு கற்பித்து வருகின்றனர், அதுபோல் உயர்தர கலைப் பிரிவு நியமனம் பெற்ற பல ஆசிரியர்கள் ஆரம்ப, இடை நிலை வகுப்புக்களில் பொருத்தமான பாடவேளைகள் இன்றி கடமையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் உரிய வகையில் ஆசிரியர் வெற்றிடம் மதிப்பீடு செய்யப்படாது இவ் நியமனம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படுவதாக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் வடக்கு ஆளுநரின் இத்தகைய முடிவு வரவேற்கத்தக்கது.

வவுனியாவில் living together வாழ்கை; மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திய கணவர் தற்கொலை..!

0

ஏற்கனவே திருமணமான ஒரு பெண், ஏற்கனவே திருமணமான ஒரு ஆண் வவுனியா சமயபுரம் என்னும் இடத்தில் கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த நிலையில். திடீரென நேற்றைய தினம் கணவர், மனைவியையும் மாமியாரையும் கத்தியால் குத்தி விட்டு தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தற்கொலையை பொலிசார் நம்பவில்லையாம் எனத் தெரிய வருகின்றது.

வவுனியா, சமயபுரம் பகுதியில் மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற ஒரு துயரச் சம்பவத்தில், குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய பின்னர், வீட்டைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

சமயபுரத்தில் உள்ள வீட்டிற்கு இன்று இரவு வந்த கிருஷ்ணகுமார் (வயது 45) என்பவர், வீட்டில் இருந்த தனது மனைவி வசந்தி (வயது 30) மற்றும் அவரது தாயார் இந்திரா (வயது 69) ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கும் தீ வைத்துள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குற்றச் செயலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணகுமார், பின்னர் அதே வீட்டின் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கிருஷ்ணகுமாரும், காயமடைந்த வசந்தியும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த ஒரு வருடமாக சமயபுரம் பகுதியில் கணவன் மனைவியாக வசித்து வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு living together வாழ்கையினை திருமணம் செய்யாது வடக்கில் பலரும் வாழ்ந்து வருகின்றனர். இதுவும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் வகையிலான முறை தவறிய விபச்சாரம் தான். இத்தகைய சிலர் சட்ட விரோத செயல்கள், போதைப் பொருள் வர்த்தகம், அச்சுறுத்தி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எமது தமிழ் சமுதாயம் எங்கே செல்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியாகத் தான் உள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும்..!

0

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்திய மீனவர்களின் அத்துமீறலானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் இந்திய தரப்புக்கும் தெரிவித்திருந்தோம். கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைது செய்தோம்.

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம். கடற்படைக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும். இலங்கை கடற்படையினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்துவருகின்றனர்.

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால்தான் இலங்கை கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கை கடற்பரப்பு கடல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.” – என்றார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும்..!

0

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

“உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026-2030 அரச நிதிச் சட்டகம் மற்றும் அரச நிதி மூலோபாயக் கூற்று மற்றும் தேசிய கொள்கைச் சட்டகமான “செழிப்பான நாடு – அழகான வாழ்வு” எனும் கொள்கைச் சட்டகத்திற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது தேசிய கொள்கைச் சட்டகத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய அமைச்சுக்களின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்கள் அடையாளங்கண்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து அமைச்சுக்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பு 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கு ஏற்றவாறு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

0

லாஃப் சமையல் எரிவாயுவின் ஜூலை மாதத்துக்கான விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலை திருத்தத்தின்படி,

12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவாலும் 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது.

அந்த விலையுயர்வின் அடிப்படையில், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபா எனவும் 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, மே, ஜூன் மாதங்களில் லாஃப் எரிவாயு விலைகள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த மாதமும் விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!