Saturday, June 27, 2026
Huis Blog Bladsy 26

பெண்ணை துஸ்பிரயோகம் செய்து இரு பியர் போத்தல்களை சொருகியவர்கள் கைது..!

0

வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப் போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து இரண்டு கண்ணாடிப் போத்தல்களை மாரவில ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண். கடந்த மாதம் 9 ஆம் திகதி 1990 அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மேலும் அவரை ஸ்கான் செய்ய பரிந்துரைத்த பிறகு, பெண்ணின் வயிற்றில் இரண்டு போத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது இரண்டு போத்தல்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இது தொடர்பாக நோயாளியை மேலும் விசாரித்த போது, ​​

அவர் தேங்காய் சார்ந்த உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஜனவரி 1 ஆம் திகதி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றதாகவும் கூறினார். விருந்தின் போது, ​​நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுடன் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்த போது, ​​அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் இரண்டு போத்தல்களை அவரது அந்தரங்க உறுப்புகளில் செருகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக தனியார் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நத்தாண்டிய-வலஹாபிட்டிய மற்றும் பனங்கொட பகுதிகளைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடைய இருவரையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதுடைய பெண்ணையும் மாரவில பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோமாவில் இருந்து எழுந்த விமல் உண்ணாவிரத நாடகத்தில் குதிப்பு..!

0

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12.01.2026) காலை முதல் தொடர்ச்சியான சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை கடந்த காலத்தில் கல்விக்கும், அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராகவும் கடும் அநீதி நடைபெற்ற போது கோமாவில் இருந்த விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் தமது குறுகிய அரசியல் இருப்பிற்காக கல்வி விடயத்தில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதே கல்வித் துறை சார்ந்தோரின் முடிவாக உள்ளது.

தமிழரசு கட்சியின் மன்னார் உறுப்பினர்களுடன் சத்தியலிங்கம் எம்.பி சந்திப்பு..!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக்கிளை உறுப்பினர்களை இன்று (12.01) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

கட்சியின் மன்னார் மாவட்டக்கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிற்பாடு சபைகளில் ஆட்சியமைத்தலின் போது ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட்டது.

மேலும் சமகால அரசியல் நிலவரங்கள் உட்பட கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மன்னார் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

யாழிலிருந்து நேரடி ஏற்றுமதிக்கு சுங்கத் திணைக்களம் ஆதரவு..!

0

யாழிலிருந்து ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதற்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உறுதியளித்தார்.

வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது வடக்கின் ஏற்றுமதிச் சவால்கள் குறித்துத் தெரிவித்த ஆளுநர்,

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தற்போதைய நிலையில் மூன்றாம் தரப்பினரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இலாபம் குறைவடைகின்றது.

இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஒரு விவசாயி தனது உற்பத்திப் பொருளைத் தானே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையிலான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த சுங்கத் திணைக்களம் உதவ வேண்டும், என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இந்தத் திட்டத்துக்குக் கொள்கையளவில் நாம் இணக்கத்தை வெளியிடுகின்றோம். தற்போதுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்த்து, வெகு விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம், எனக் குறிப்பிட்டார்.

இதனை எவ்வளவு விரைவாகச் சாத்தியப்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக ஆரம்பிப்போம் என ஆளுநர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி முரசுமோட்டையில் கோர விபத்து; அதிகரித்த பலி எண்ணிக்கை..!

0

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்துமே நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கூழாமுறிப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய ரவிகரன் எம்.பி..!

0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2026 நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

கூழாமுறிப்பு கிராம மக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பானது, கூழாமுறிப்பு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

அந்தவகையில் உள்ளகவீதிகளின் சீரமைப்பு, பழுதடைந்த வீதி விளக்குகளை சீர்செய்தல், கூழாமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் சீரின்மையால் குளத்துநீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முத்துஐயன் கட்டு ஏழாம் கண்டம் கமக்கார அமைப்பினைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முத்து ஐயன்கட்டு ஏழாம் கண்டத்திற்குரிய நீர்ப்பாசன வாய்க்காலை அமைத்தல், விவசாய வீதிகளை சீரமைத்தல், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன் போது முன்வைக்கப்பட்டன.

குறித்த குறைகேள் சந்திப்பினைத் தொடர்ந்து குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் சீரின்மையால் குளத்து நீர் குடியிருப்புக்குள் உட்புகுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

அத்தோடு கூழாமுறிப்பு குளத்தின் கீழான கீழ்வெளி வயல் நிலங்களுக்குச் செல்லும் விவசாய வீதிசீரின்மை மற்றும் கீழ்வெளி விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசன வாய்க்கால் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான விடயங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பார்வையிட்டிருந்தார்.

இவ்வாறாக மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், நிலமைகளை நேரிலும் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு எழுத்து மூலமாக கோரிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டதுடன், கூழாமுறிப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

வசந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்தினார் – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல், வசந்தபும் கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2026 நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.

வெள்ள அனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வசந்தபுரம் கிராம மக்களின் வேண்டுகோளிற்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினரால் அப்பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னர் தாம் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக வசந்தபுரம் கிராமமங்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிடப்பட்டது.

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் வசந்தபுரம் கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் கிராமத்திலிருந்து நீண்டதூரத்தில் குடிநீருக்கான நீர்த்தாங்கியொன்று வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிராம மக்கள், குடிநீரைப் பெறுவதற்கு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும், ஒரு நீத்தாங்கி குடிநீர் போதுமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்தனர்.

எனவே குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் இடர்பாட்டினைத் தீர்த்து வைக்குமாறு இதன் போது நாடளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

மேலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் கிராமமாக வசந்தபுரம் கிராமம் காணப்படுவதால், குறித்த கிராமத்தை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வேறு குடியமர்த்தப்படுகின்ற போது தமது வாழ்வாதாரத்தினைக் கருத்திற் கொண்டு ஒரு குடும்பத்திற்கு 0.5ஏக்கர் காணியினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வசந்தபுரம் கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கைகளை எழுத்து மூலமாக கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், வசந்தபுரம் கிராமமக்களின் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழரின் யாழ் வீட்டில் விபச்சாரம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார்.

குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவலை அடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், நேற்று முன் தினம் (10) வீட்டினை முற்றுகையிட்டு , வீட்டில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் அந்த வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் ஆகியோரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (11) யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை – CPU எச்சரிக்கை

0

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில்,

இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வது குறித்தும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் நிதி விடயங்கள் குறித்து எவரையும் நம்ப வேண்டாம் என அவர் மக்களுக்கு எச்சரித்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகள், மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளைக் கையாள சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு (CPU) முழுமையாகத் தயாராக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் மற்றும் வலைத் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விசாரணைகளை வலுப்படுத்தவும் பொது மக்களை எச்சரிக்கவும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை முன்னறிவித்தல் 12.01.2026

0

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!