Saturday, June 27, 2026
Huis Blog Bladsy 31

அப்பா டீசல் வாகனத்திற்கு மண்ணெண்ணை ஊற்றி ஓடுவார்; 4 வயது மகனின் வாக்குமூலம்..!

0

அண்மையில் அலுவலகம் ஒன்றில் ஒளிவிழா நடைபெற்றுள்ளது. குறித்த அலுவலக ஒளிவிழாவுக்கு தமது பிள்ளைகளையும் அலுவலர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அந்த அலுவலகத்தில் வாகனம் ஒன்றின் சாரதியாகக் கடமையாற்றும் ஒருவரும் தனது மகனை ஒளிவிழாவுக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு வந்த மகன் அங்குள்ள அலுவலர்களுடன் மிகவும் சகஜமாகப் பழகத் தொடங்கியுள்ளார். அதன் பின்னர் அங்குள்ள அலுவலர்களுக்கு தனது அப்பாவின் வீரதீரப் பிரதாபங்களை கூறியுள்ளார்.

வீட்டில் தன்னுடன் சேர்ந்து அப்பா டான்ஸ் ஆடுவார் என கூறத் தொடங்கிய மகன் தனது அப்பா வீட்டில் மண்ணெண்ணை வாங்கி வைத்துள்ளதாகவும் அந்த வாகனத்தை (வெளியில் நின்ற அரச வாகனத்தைச் சுட்டிக் காட்டி) கொண்டு வந்து வீட்டில் மண்ணெண்ணை விட்டுவிட்டே ஓடுவதாகவும் கூறியதால் அலுவலர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த சாரதி அலுவலகத்தில் சிலருடன் முரண்பட்டு வந்ததால் மகனின் கூற்று அங்குள்ள சிலருக்கு தேன் போல் பாய்ந்துள்ளது. மகனை அவர்கள் மீண்டும் மண்ணெண்ணை விட்டு ஓடுவது தொடர்பாக கூறச் செய்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து திணைக்களத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகத் குறித்த அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் திணைக்களத்தலைவரிடமிருந்து எந்தவித அசுமாத்தமும் காணப்படவில்லை என குறித்த அலுவலகத் தரப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவளை வடக்கில் கல்வியுடன் தொடர்புடைய சில திணைக்களங்களில் உத்தியோகபூர்வ வாகனம் உள்ள நிலையிலும் அதனைப் பயன்படுத்தாது தமது சொந்த வாகனங்களை மேலதிகாரியின் அனுமதியுடன் இணைத்து எரிபொருள் மோசடி இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்றைய இராசி பலன் (04.01.2026)

0

மேஷம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

ரிஷபம்

இன்று வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் பிணக்குகள் வராது. புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி முடியும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விற்பனை, லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்

இன்று கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை நிறுவும் திட்டம் நிறைவேறும். உங்களை எதிர்த்துத் தொழில் செய்தவர்கள் உங்களைக் கண்டு மிரண்டு ஓடுவார்கள். வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். முதியோர்களால் வைத்தியச் செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்

இன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள். புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பெண்கள் விரும்பிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். அடகுபோன நகைகளையும் மீட்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி

இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் கிட்டும். காவல்துறை, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகள் திட்டமிட்டபடி நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்

இன்று மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களின் லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்

இன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரனையால் சந்தோஷம் கொள்வீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு

இன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். நீண்ட நாளைய நண்பரைப் பிரிய வேண்டி வரலாம். அனைத்து சங்கடங்களும் விலகி நல்ல பலன்களை அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்

இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறமையோடு இருப்பார்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் வந்துசேரும். சகோதரர்கள் சண்டை நீங்கி ஒன்று கூடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்

இன்று அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். உத்யோகஸ்தர்கள் பணிச்சுமையில் அவதிப்பட்டது மாறும். கேட்டபடி மாறுதல் கிடைக்கும். சிலர் விருப்ப ஓய்வில் செல்வார்கள். திட்டமிட்டபடி எதிர்காலத்தை அமைத்துக்கொள்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை இலக்கு வைத்து ட்ரம்ப் போடும் கணக்கு..!

0

வெனிசியூலாவில் ஆட்சி நிர்வாகத்தை அமெரிக்கா பின்னின்று மேற்கொள்ளுமென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசியூல இராணுவ நடவடிக்கையின்பின்னர் ஆற்றிய உரையில் அவர் மேலும் கூறியதாவது,

பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான மாற்றத்தை நாங்கள் செய்யக்கூடிய காலம் வரும் வரை நாங்கள் அங்கு ஆட்சியை நடத்தப் போகிறோம்.

எனவே வேறு யாராவது இதில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை, கடந்த நீண்ட காலமாக நாங்கள் கொண்டிருந்த அதே நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்.

வெனிசுலாவின் மக்களுக்கு அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியை நாங்கள் வழங்க விரும்புகிறோம்.

வெனிசுலாவில் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாகவே நலிவடைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். நமது மிகப் பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உள்ளே சென்று, பில்லியன் கணக்கான டொலர்களை செலவழித்து, மோசமாக சேதமடைந்த உள்கட்டமைப்பை சரிசெய்து, நாட்டிற்கு பணம் சம்பாதிக்கத் தொடங்கப் போகிறோம்.

எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க ஆயுதப் படைகள் வெனிசுலாவின் தலைநகரில் ஒரு அசாதாரண இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன.

இது அமெரிக்க வரலாற்றில் அமெரிக்க இராணுவ வலிமை மற்றும் திறமையின் மிகவும் அதிர்ச்சியூட்டும், பயனுள்ள மற்றும் சக்தி வாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். – என்றார் ட்ரம்ப்

முன்னாள் அமைச்சர் டக்ளஸை நேரில் சந்தித்த நாமல் ராஜபக்ஷ..!

0

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளார்.

மஹர சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்த அவர் குறித்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்து நாமல் நலன் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டக்ளஸை சந்தித்தபின் சிறையில் இருந்து வெளியே வந்த நாமல், அரசாங்கம் அரசியல் ரீதியாக திவாலாகி வரும் அதே வேளையில் அரசியல் அடக்குமுறையையும் செயல்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் வசம் சென்ற விவகாரம் தொடர்பிலேயே டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினான கலந்துரையாடல்..!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று 03.01.2025 இன்று முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.விகே.சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சார்க் பத்திரிகையாளர்கள் சர்வதேச மாநாடு இந்தியாவில் ஆரம்பம்..!

0

தெற்காசிய பிராந்தியத்தில் ஊடக சுதந்திரத்தை மையமாகக் கொண்ட சார்க் (SAARC) பத்திரிகையாளர்கள் மன்ற சர்வதேச மாநாடு நாளை ஞாயிற்றுக் கிழமை (04) இந்தியாவின் நாலந்தா பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாடு நாளையதினம் ஆரம்பமாகி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னணி ஊடகவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் குறித்த அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

சர்வதேச ஊடக நெறிமுறைகளை மதிக்கவும், ஊடகவியலாளர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கவும் பிராந்திய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

பிராந்தியத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தடைகள் குறித்து சர்வதேச தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவனை மீறி பாடசாலை கால நண்பர்களுடன் தொடர்பு; கணவன் செய்த அதிரடி..!

0

கணவனின் சொல்லை மீறி பாடசாலை கால நண்பர்களுடன் தொடர்பை பேணிய மனைவியை இலங்கைக்கு கூட்டி வந்த கணவர், மனைவியின் கடவுச்சீட்டையும் எடுத்துக் கொண்டு பிரன்ஸிற்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும், கணவன் முல்லைத்தீவை பின்புலமாக கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.

இவர்கள் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், மனைவியின் பாடசாலை கால நட்புகளால் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பாடசாலை நண்பர்களின் நட்பை துண்டிக்குமாறு கணவன் வற்புறுத்தியும் , மனைவி அதனை காதில் வாங்காது நட்பை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் தாயாருக்கு 50 ஆவது பிறந்தாளை சர்ப்பிரைஸாக கொண்டாடலாம் என கூறி மனைவியுடன் இலங்கைக்கு வருகை தந்த கணவன், கொழும்பில் வீடு ஒன்றை எடுத்து தங்கியுள்ளார்.

இதன் போது மனைவியின் பாடசாலை கால நண்பர்கள் விவகாரம் மீண்டும் சச்சரவை ஏற்படுத்திய நிலையில், கணவன் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கியதாக கூறப்படுகின்றது.

அதோடு பெண்ணின் பாஸ்போர்டையும், அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் எடுத்து கொண்டு பிரான்ஸ் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

பெண்ணின் சத்தம் வந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர்கள் கதவை திறந்து பார்த்த போது பெண்னை கண்டு அதிர்ச்சியடைந்து , உடனடியாக பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

வடக்கின் கல்வியின் உயரதிகாரி கோழிப் பண்ணையில் கூட வேலை செய்ய லாயக்கற்றவர்..!

0

வடக்கின் கல்விக்கு பொறுப்பான அதிகாரி கோழி பண்ணையில் கூட கடமை செய்ய லாயக்கற்றவர். இவ்வாறான திறமையற்ற, பொறுப்பற்றவரை நீக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளும்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த பாராளுமன்றத்திலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த கிராமம் என்ற வகையில் இந்த கிராமமானது பெருமை அடைகின்றது.

அதேபோல இந்த கூமாங்குளம் வட்டாரமானது ஐந்து பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ளது.

இந்த கிராமமானது கடந்த யுத்த காலத்திலே பல்வேறு வகையான அனர்த்தங்களுக்கு உள்ளானது. இருந்த போதிலும் தற்போது எமது அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் பல வீதிகள் புனரமைக்கப்பட்டது. அதேபோல் இந்த கிராமத்தை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் இந்த கிராமத்தை முதலாவதாக கல்வியிலே அபிவிருத்தி அடைய செய்ய வேண்டும்.

பொருளாதாரம் இன்று நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கல்வியினுடைய அபிவிருத்தி தான் முக்கியம். கல்வியினுடைய அபிவிருத்தி இல்லாத எந்த ஒரு அபிவிருத்தியும் நிலைபேறற்றது.

ஆகவே, எமது கிராமத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வதன் மூலம் இங்கே இருக்கின்ற சிறார்களின் எதிர்காலத்தை சிறப்படைய செய்ய வேண்டும்.

இந்த கிராமத்தில் அண்ணளவாக 7000 குடிமக்கள் இருக்கின்றார்கள். ஆகவே இந்த கிராமத்தை நாம் கல்வி ஊடாகத் தான் அபிவிருத்தி அடைய செய்ய முடியும்.

அதுபோல், இந்த வடமாகாணத்தையும் கல்வியினால் தான் அபிவிருத்தி அடைய செய்ய முடியும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் இலங்கையினுடைய மொத்த தேசிய உற்பத்தியிலே வடக்கு மாகாணமானது 4.4 வீதமாக அதனுடைய உற்பத்தி காணப்படுகின்றது.

இதை எண்ணும் போது மன வேதனையாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த வடக்கு மாகாணத்தின் கல்வியினுடைய வீழ்ச்சி தான் இதற்கெல்லாம் காரணமாக எண்ண தோன்றுகின்றது.

அதேபோல, வடமாகாணம் தேசிய உற்பத்தியில் 4.4%, கல்வியில் 9ஆம் இடம், போதைவஸ்தில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது.

கல்வியில் தாழ்ந்த நிலையிலும், போதைப் பொருளில் உயர்ந்த நிலையிலும் காணப்படுவதற்கு பலர் வியாக்கியானம் சொல்வார்கள். கல்வி வீழ்ச்சி அடைந்ததன் காரணமாகத் தான் போதைவஸ்தின் பாவனை உயர்ந்தது.

இரண்டும் நேர்மாறாக காணப்படுகின்றது. இதற்கு எல்லாம் காரணம் இந்த சபையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள். வினைத்திறன் குன்றியவர்களாக இருக்கிறார்கள். அதாவது இருக்கின்ற வளங்களை சமனாக பகிர்ந்தளிக்கக் கூடிய திறமையற்ற அதிகாரிகளாக காணப்படுகிறார்கள்.

உதாரணமாக நான் ஒரு கால்நடை வைத்தியர் என்ற வகையில், நான் அண்மையிலே ஒரு கோழி பண்ணைக்கு சென்றேன். அங்கே இந்த பண்ணையாளர் தெரிவித்தார். வைத்தியரே எங்களுடைய பண்ணையில் ஆயிரம் கோழிகள் இருக்கின்றன. 950 முட்டைகள் இடுகின்றன.

அந்த கோழிகளுக்கு சமனாக உணவை பகிர்ந்தளித்ததன் காரணமாகத் தான் அந்த சராசரி முட்டை உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்று சொன்னார். இறுதியாக அவர் சொன்னார் என்னிடம் வட மாகாணத்தில் இருக்கின்ற கல்விக்கு பொறுப்பான அதிகாரி கோழி பண்ணையில் கூட கடமை ஆற்றுவதற்கு லாயக்கற்றவர்.

ஆகவே இவ்வாறான திறமையற்ற லயக்கற்ற பொறுப்புணர்வற்ற அதிகாரிகளை நீக்க வேண்டும். ஒரு காலத்தில் இலங்கையில் வடமாகாணம் தான் கல்வியில் உயர்ந்து நின்றது.

இலங்கை படத்தில் யாழ்பாணத்தை எடுத்தால் இலங்கையின் தலை என்பார்கள். ஆனால் இது தலைகீழாக தற்போது மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?. வடமாகாணத்தில் இருக்கின்ற கல்வி நிர்வாக அதிகாரிகளுடைய பொறுப்பற்ற தன்மையும், திறமையற்ற தன்மையும் தான் காரணம் என்பதை நான் இந்த தருணத்தில் உங்களுக்கு அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே எமது வடக்கு மாகாணம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று சொன்னால் கல்வியில் தான் சிறந்து விளங்க வேண்டும். ஏனென்றால் யுத்த காலத்தில் எம்மிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும், உறவுகளையும், சொந்தங்களையும், பந்தங்களையும் இழந்து கல்வியையும் இழந்துவிட்டோம்.

அதை மீண்டும் நாங்கள் வளர்க்க வேண்டும். எமது வடமாகாணமானது சிறந்து விளங்க வேண்டும் என்றால், இவ்வாறான திறமையற்றவர்களை நீக்கி நல்ல பொறுப்புணர்வுள்ள, நேர்மையான, திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மீண்டும் கல்வியை வளர செய்வதன் மூலம் எமது வடக்கு மாகாணத்தை பொருளாதாரத்தில் உயரச் செய்ய முடியும் என்று கூறுகின்றேன்.

ஆகவே இவ்வாறான திறமையற்ற லயக்கற்ற பொறுப்புணர்வற்ற அதிகாரிகளை நீக்க வேண்டும். ஒரு காலத்தில் இலங்கையில் வடமாகாணம் தான் கல்வியில் உயர்ந்து நின்றது.

இலங்கை படத்தில் யாழ்பாணத்தை எடுத்தால் இலங்கையின் தலை என்பார்கள். ஆனால் இது தலைகீழாக தற்போது மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன?. வடமாகாணத்தில் இருக்கின்ற கல்வி நிர்வாக அதிகாரிகளுடைய பொறுப்பற்ற தன்மையும், திறமையற்ற தன்மையும் தான் காரணம் என்பதை நான் இந்த தருணத்தில் உங்களுக்கு அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே எமது வடக்கு மாகாணம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று சொன்னால் கல்வியில் தான் சிறந்து விளங்க வேண்டும். ஏனென்றால் யுத்த காலத்தில் எம்மிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும், உறவுகளையும், சொந்தங்களையும், பந்தங்களையும் இழந்து கல்வியையும் இழந்துவிட்டோம்.

அதை மீண்டும் நாங்கள் வளர்க்க வேண்டும். எமது வடமாகாணமானது சிறந்து விளங்க வேண்டும் என்றால், இவ்வாறான திறமையற்றவர்களை நீக்கி நல்ல பொறுப்புணர்வுள்ள, நேர்மையான, திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மீண்டும் கல்வியை வளர செய்வதன் மூலம் எமது வடக்கு மாகாணத்தை பொருளாதாரத்தில் உயரச் செய்ய முடியும் என்று கூறுகின்றேன்.

எமது வடமாகாணத்தை பொறுத்த வரையில் பல இடங்களில் நேரடியாக சென்ற போது, அண்மையில் ஒரு மாணவன் சொன்னான். தங்களுக்கு பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியர் இரண்டு வருடமாக இல்லை என்று. அதற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. நாங்கள் கேட்டால் அவர்கள் அதற்குரிய வெற்றிடங்களை நிரப்புவதில்லை.

இறுதியாக பக்கத்தில் உள்ள அவருடைய நண்பன் சொன்னான் வருகின்ற திருவிழாவில் கோவிலுக்கு நேர்த்தி வைத்து தூக்கு காவடி எடுத்தால் தான் நமக்கு ஆசிரியர் வருவார் என்று. அவ்வாறு நடந்தால் தான் கொடுப்பார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன்.

13ஆம் திருத்த சட்டத்தில் கல்வியினுடைய பல்வேறுபட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும்.

ஆனால் அவ்வாறு நியமிக்கவில்லை. இதனுடைய காரணம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எங்களுக்கு உண்டு பண்ணுகின்றது. ஒரு இனம் அதனுடைய கலாச்சாரம் நிலைத்து நீண்டு நிலைக்க வேண்டும் என்றால் கல்வி தான் தக்க வைக்கக்கூடிய இருப்பாகும். அந்த கல்வியின் கேள்விக்குறியானால் இனத்தினுடைய அடையாளம் அற்றுப் போகக்கூடிய ஒரு ஆபத்து இருக்கின்றது.

ஆகவே எதிர்வரும் காலத்தில் எமது ஜனாதிபதியினுடைய நேரடி பார்வையில், நேரடி வழிகாட்டுதலின் கீழே வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அமைச்சர் விமல் ரத்நாயக்கா அவர்களுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் இவ்வாறான திறமையற்ற அதிகாரிகளை நீக்கி நல்ல அதிகாரிகளை எமது மாணவச் செல்வங்களுக்கு வழங்கி வடக்கு மாகாணத்தினுடைய கல்வியை உயர்த்துவோம் என்று கூறி இந்த உரையை நான் நிறைவு செய்கின்றேன் என்றார்.

தையிட்டியில் நிறுவுவதற்காக கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை மீட்பு; விசாரணைகள் தீவிரம்..!

0

தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டிச் சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தையிட்டி விகாரையில் இன்றைய தினம் (03) சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கு தமிழ் தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், கடந்த 30ஆம் திகதி தையிட்டி விகாராதிபதி தமது விகாரைக்குள் எவ்வித புதிய கட்டுமானங்களையும் தான் செய்ய மாட்டேன் என்றும், விசேட பூஜைகளுக்கோ பெரஹரா போன்ற எதற்கும் தான் அனுமதி கொடுக்கவில்லை எனவும் ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் புத்தர் சிலையுடன் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழு ஒன்று, காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டிச்சாலையில் காத்திருக்கின்றனர் என காங்கேசன்துறை காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த காவல்துறையினர் புத்தர் சிலையை மீட்டதுடன், புத்தர் சிலையை எடுத்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டானில் அடாவடித்தனமாக கற்குவாரி அமைக்க முயற்சி – ரவிகரன் எம்.பி எச்சரிக்கை

0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் மக்களின் விருப்பிற்கு மாறாக அடாவடித்தனமாக கற்குவாரி ஒன்றினை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு 02.01.2025இன்று நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மக்களின் விருப்பிற்கு மாறாக காதாலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கப்பட்டால் மக்களோடு இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

குறித்த களவிஜயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

காதலியார் சம்மளங்குளம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு கற்குவாரி ஒன்றினை அமைத்து, பாறைகளை வெடிவைத்து தகர்த்து அகழ்வு செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கிராமமக்களின் எதிர்ப்பினால் குறித்த கற்குவாரி கடந்த 2022ஆம் ஆண்டு மூடப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் குறித்தபகுதியில் கற்குவாரி ஒன்றினை அமைந்து, கற்களை அகழ்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே கற்குவாரி அமைக்கப்பட்டதனால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து தாம் மீழுவதற்கு முன்பாக மீண்டும் கற்குவாரி அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தமக்கு கவலையளிப்பதாகவும் மக்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

குறிப்பாக ஏற்கனவே கல் அகழப்பட்ட குழியினுள் தமது கால்நடைகள் தவறி வீழ்ந்து இறக்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படடுவதாக இதன்போது கிராமமக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு கடந்த காலத்தில் அங்கு இயங்கிய கற்குவாரியில் கல் உடைப்பதற்காக வெடிவைக்கின்ற போது ஏற்படுகின்ற அதிர்வுகளால் காதலியார் சம்மளங்குளம் கிராமத்திலுள்ள பல வீடுகளின் சுவர்களிலும், ஜன்னல் கண்ணாடிகளிலும், கிணற்றுக் கட்டுகளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டதாகவும் கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தியதுடன், நேரடியாகவும் காண்பித்தனர்.

அதேவேளை குறித்த பகுதியில் கற்குவாரி அமைத்து கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதன் பிற்பாடு தமது கிராமத்திலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் கிராமமக்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும் குறித்த கற்குவாரி அமைக்கப்பட்டால், அதனால் ஏற்படும் அதிர்வுகளாலும், வெளிப்படும் தூசியினாலும் கிராமத்திலுள்ள மூச்சுத் திணறல் நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் இருதய நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன், கற்பிணித் தாய்மார்கள், சிறார்களும், முதியோரும் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுமெனவும் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

எனவே தமது கிராமத்திற்கு பல்வேறு வழிகளிலும் பாதிப்பாக அமைகின்ற கற்குவாரியை, மீண்டும் தமது கிராமத்தில் அமைக்க எடுக்கப்படுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறும் இதன்போது கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிகை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களின் முறையீடுகளை நன்கு செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கலந்துரையாடினார். அந்தவகையில் கற்குவாரியின் பாதிப்பு நிலமைகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஏற்கனவே கடந்த ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் கற்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படக் கூடாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதேசசெயலாளரிடம் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

மக்களுக்கு பலவழிகளிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கற்குவாரி மக்களின் எதிர்ப்பினால் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிராமமக்களின் அனுமதியின்றி, மீண்டும் இக் கிராமத்தில் கற் குவாரி ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மக்கள் எம்மிடம் முறையீடு செய்துள்ளனர்.

இவ்வாறு அடாவடித்தனமான முறையிலும், மக்களின் விருப்பிற்கு மாறாகவும் கற்குவாரி அமைத்து, இங்கு கல் அகழ்வுச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் மக்களோடு இணைந்து வீதயில் இறங்கி பாரிய போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படுமென உரியவர்களை எச்சரிக்கின்றேன்.

ஏற்கனவே இங்கு கற்குவாரி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து, மக்களால் இதுவரை மீளமுடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இங்கு மீண்டும் கற்குவாரியை அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் கற்குவாரி அமைக்க அனுமதி வழங்க முடியதென்றே தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலரிடமும் இதுகுறித்து கலந்துரையாடியுள்ளேன். கடந்த பிரதேச அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்தை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு கற்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய இடங்களில் கலந்துரையாடுவதுடன், மக்களுக்கு பாதிப்பான இந்த கற்குவாரி அமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

error: Content is protected !!