Friday, April 17, 2026
Huis Blog Bladsy 44

இலங்கை மக்களின் மன அழுத்தம் தொடர்பில் ஆபத்தான சமிக்ஞை..!

0

இலங்கை மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு அல்லது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

பேராதனை பல்கலைக் கழகமும் களனி பல்கலைக்கழகமும் நடத்திய கூட்டு ஆய்வில், மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டில் மனச்சோர்வின் பரவல் கணிசமாக அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில், 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் இலங்கையர்களில் 39 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆசிய மக்களில் 16.1 சதவீதம் பேர் மட்டுமே இந்த மனநல நிலை பாதிப்பை அனுபவிப்பதாக ஆய்வு காட்டுகிறது.

19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களிடையே மனநல சேவைகளை வழங்குவது அவசரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

ஏனெனில் இந்த வயதினரில் கணிசமான எண்ணிக்கையினர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இந்த எண்ணிக்கை சுமார் 7 சதவீதம் என்று கூறப்படுகிறது.

யாழில் கொல்லப்பட்ட பிரான்ஸ் தமிழ் இளைஞன்; அம்பாறையில் இருவர் கைது..!

0

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழில் வசித்து வந்த இளைஞன் கடந்த 19 ஆம் திகதி வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது..!

0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) முன்னாள் தலைவர் A.M.M. ஹில்மியை டிசம்பர் 9 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்கா எஸ். போதரகம இன்று உத்தரவிட்டார்.

SLBFE அதிகாரிகளுக்கு வெளிப்புற அடிப்படையிலான பயிற்சித் திட்டத்தை வழங்குவதற்காக ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜனவரி 2024 இல் நடத்தப்பட்ட கொள்முதல் செயல்பாட்டில் முறைகேடு செய்ததாக ஹில்மி மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

குற்றச்சாட்டுகளின்படி, அவர் சட்டவிரோதமாக டெண்டரை JSF ஹோல்டிங்கிற்கு வழங்க செயல்பட்டார், இதனால் அந்த நிறுவனம் ரூ. 5.3 மில்லியன் அரசு நிதியைப் பெற்றது. மேலும் ரூ. இந்தத் தொகையில் 4.3 மில்லியன் ரூபாயை வழக்கின் முதல் சந்தேக நபரான ஜி.எச்.டி. ஷான் யஹத்பத் சட்டவிரோதமாகப் பெற ஏற்பாடு செய்துள்ளார்.

இரண்டு சந்தேக நபர்களும் பொது சொத்துக்களுக்கு எதிரான குற்றச் சட்டத்தின் கீழ், அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு உதவியதற்காக சதித்திட்டம் தீட்டியதாகவும், குற்றத்திற்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பெயர்ப்பலகை அகற்றல்; தவிசாளர் உட்பட அனைவருக்கும் பிணை..!

0

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த மூவர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.

இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்றைய தினம் வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.

இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உறுப்பினர் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் மூவரும் சரணடைந்தனர்.

ICCPR சட்டத்தின் அடிப்படையில் அம்பிட்டிய தேரரை கைது செய்ய உத்தரவு..!

0

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ICCPR சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2023/10/23 அன்று சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தனுக ரணஞ்சக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

“வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்“ என்று மட்டக்களப்பில் உள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கூறியது தொடர்பாக, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி; கிளிநொச்சியில் சம்பவம்..!

0

கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தெய்வீக ஆசீர்வாதத்தால் பேயை விரட்டிய பூசாரியால் சிறுமி படுகாயம்..!

0

வெலிமுவபொத்தானை பகுதியில் 16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலய பெண் பூசாரி, கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் தேவாலயத்துக்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 16 வயது சிறுமியை கரும்பினால் அடித்து, தீப்பந்தத்தால் எரித்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் , பலத்த எரி காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் பூசாரி கைது செய்யப்பட்டதாக ஹொரவப்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவப்பொத்தான, வெளிமுவபொத்தான, கபுகொல்லாவையில் வசிக்கும் 45 வயது திருமணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் தனது அறைகளில் ஒன்றில் “சீதா மைனியன்” என்ற பெயரில் ஒரு தேவாலயத்தை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெய்வீக ஆசீர்வாதத்தால் பெண் பூசாரி நோயாளிகளை குணப்படுத்துகிறார் என்ற தகவலின் அடிப்படையில். மதவாச்சி, பிஹிபியகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் 16 வயது மகளுக்கு சிகிச்சை பெற கடந்த 23 ஆம் திகதி தேவாலயத்துக்குச் சென்றிருந்தனர்.

16 வயது சிறுமியை பேய் பிடித்திருப்பதாக கூறி, பெண் பூசாரி, சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டும் முயற்சியில், கரும்புகையை மூட்டி, அடித்து, எரிந்த தீப்பந்தத்தால் உடலை எரித்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெண் பூசாரி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் உட்பட மூவர் நீதிமன்றில் முன்னிலை..!

0

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூன்று பேர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலே குறித்த மூவரும் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

யாழில் ஹெரோயின் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது..!

0

யாழ் – அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுவதாக குருநகர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லூர் அரசடிப் பகுதியில் 570 மில்லி கிராம் ஹெரோயினுடன் விற்பனையில் ஈடுபட்ட 24 வயதுடைய மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன.; ஆதாரங்களுடன் மீண்டும் முன்வைத்த சஜித்..!

0

நிலையியற் கட்டளை 91 ஏ உறுப்பினர் ஒருவர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராகத் தகாத நோக்கத்தில் குற்றம் சாட்டுதலோ அல்லது மற்றொரு உறுப்பினரின் தனிப்பட்ட விடயங்கள் பற்றிக் குறிப்பிடுதலோ ஆகாது என குறிப்பிடுகிறது.

இதன் பிரகாரம், தான் தொடர்பாக சபையில் நடத்தப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன.

நான் விடயங்களை முன்வைக்கும் போது, ​​நான் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டேன், என்றாலும், நான் உண்மையையே முன் வைத்தேன். நான் பொய் கூறவில்லை.

பொலிஸ் சான்றிதழைப் பெறும்போது பொது மக்கள் பாதுகாப்புக் குழு அல்லது சிவில் பாதுகாப்புக் குழுவின் கட்டாயப் பரிந்துரை வழங்கப்பட வேண்டும் என்பது பொய்யல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஹக்மன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இரண்டு கடிதங்கள் காணப்படுகின்றன. இந்த கடிதங்களை 280 பி படபத்த எனும் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர் யசந்த ஆரியசேன என்பவராலயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடிதங்கள் அனைத்தையும் ஹன்சாட் பதிவிடுகிறேன். இதன் மூலம் யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பது வெளிப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாத்தறை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தல் பலகையில் கூட இதுபோன்ற ஒரு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் அறிக்கையைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களில் சிவில் பாதுகாப்பு குழுவின் கடிதம் தேவை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதை தொடர்ந்து இன்று காலை குறித்த அறிவித்தல் பலகையில் அந்தப் பகுதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. தான் உண்மையைச் சுட்டிக்காட்டியதாகவும், நாட்டு மக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த உண்மைச்சம்பவங்களை அறிக்கையிட்ட, பேசிய ஊடகவியலாளர்களை இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்திருப்பது தவறான நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டு உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டன.

error: Content is protected !!