Friday, April 17, 2026
Huis Blog Bladsy 43

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்து; இளைஞன் பலி..!

0

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை செய்யச் சென்ற போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பின் மூலமே கல்வித் தரத்தை நாம் தக்க வைத்துள்ளோம் – பிரதமர்

0

இந்த ஆண்டின் பாதீட்டில் கல்விக்காக இதுவரை உயர்ந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கப்படுவது மட்டும் போதுமானதல்ல, கொள்கைகள் வலுவான நிறுவன அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சுகளுக்கான பாதீட்டு ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது நவம்பர் 25ஆம் தேதி பாராளுமன்றத்தில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“கல்வியைப் பற்றி பேசும் போது, நாட்டில் தரமான கல்வி அமைப்பை உருவாக்குவதற்கு நம் முடிவுகள் உறுதியான கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். கொள்கைகளை பயனுள்ள வகையில் செயல்படுத்த வலுவான நிறுவக அமைப்பு அவசியம், மேலும் இரண்டிற்கும் போதுமான நிதியுதவி தேவை.

இந்த மூன்று அம்சங்களும் நீண்டகாலமாகப் பூர்த்தியாகாததால்தான் இன்றைய கல்வித் துறையில் காணப்படும் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன. இந்த சவால்களிடையே கூட ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பின் மூலம் கல்வித் தரத்தை நாம் தக்க வைத்திருக்க முடிந்துள்ளது.

2025 இல் மிக முக்கியமான சாதனையாக கல்வித் துறையின் முடிவெடுக்கும் செயல்முறைகளை வலுப்படுத்துவதாகும். இதில் நிறுவனங்களை அடையாளம் காணுதல், பிரச்சினைகளைக் களைவது, நிறுவன கட்டமைப்புகளை சரிசெய்தல், கொள்கைச் சட்டரீதிகளுடன் ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிதி கொள்கை முன்னுரிமைகளுக்கிணங்க செலவிடப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றைக் கொண்டு 2026ல் தொடங்கவுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்கு முன்னோட்டமாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கொள்கைகளை உருவாக்குவது மட்டுமல்ல; தரமான கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான சரியான திட்டமிடலும் அவசியம். அதிகாரிகளுக்கு தெளிவான இலக்குகள் வழங்கப்பட வேண்டும்; பொறுப்புகள் முறையாக ஒதுக்கப்பட வேண்டும்.

வரலாற்றில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளைக் கணிப்பதில், பாடத் திட்டங்களில் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. இது பெரும்பாலும் திட்டமிடல் குறைபாடு, நிறுவக பலவீனம் மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை ஆகியவற்றினால் கொள்கைகள் செயல்படாமல் போனதற்காகும்.

2025 இல், இந்த குறைகளைச் சமாளித்து ஒத்திசைவான நிறுவக அமைப்பை உருவாக்குவதற்கான பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.

கல்வி அமைச்சு தனது முடிவுகளை சமத்துவம் மூலம் சமஅளவு வாய்ப்புகளை வழங்குதல், தரத்தை உயர்த்துதல், நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் தரவு மற்றும் அறிவியல் பகுப்பாய்வை பயன்படுத்தி ஆதாரபூர்வமான கொள்கைகளை வடிவமைத்தல் ஆகிய நான்கு துறைகளில் மையப்படுத்தியது. இந்த நான்கு தூண்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கி, திட்டங்களைத் தயார் செய்து, நிறுவக அமைப்புகளை கட்டியமைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கல்விக்காக ரூ. 7.04 பில்லியன், அதாவது GDPயின் 2.04% ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டிலேயே நாம் GDPயின் 6% ஐ அடைவோம் என்று எப்போதும் கூறவில்லை.

இந்த இலக்கை அடைவது கொள்கை வளர்ச்சியும் வலுவான நிறுவகங்களும் தேவை என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். நிதியை ஒதுக்குவது மட்டும் போதுமானதல்ல; அது கொள்கைகளுடன் ஒத்திசைவாகவும், நிறுவனங்களை வலுப்படுத்தியும், கொள்கைகளை செயல்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

கல்வி சீர்திருத்தங்களுக்கு கல்வி அமைச்சுக்கு ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் நடைபெற்று வரும் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான செலவீனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நமது பட்ஜெட் 2025 ஏப்ரல் இறுதியில் நிறைவேற்றப்பட்டது,.

மேலும் மே மாதத்திலிருந்து செலவீனங்கள் தொடங்கப்பட்டன. அதன்படி, நமது நிதி முன்னேற்றம் 18% ஆக இருந்தது, மேலும் டிசம்பருக்குள் அது 69% ஐ எட்டியது. கல்வித் துறையில் இதுபோன்ற திறன் முன்பு காணப்படவில்லை.

இந்த முன்னேற்றம், அதிகாரிகளுக்கு தெளிவான இலக்குகளை நிர்ணயித்ததும், நெருக்கமான கண்காணிப்பு மேற்கொண்டதும், பொறுப்புத் தன்மையை வலுப் படுத்தியதாலும் சாத்தியமானது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மேலும் அதிக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

மேலும், இன்னும் சவால்கள் மீதமுள்ளது. பல பலவீனங்களைத் தீர்க்கும் பணியுடன், தொடர்ந்து மேம்படுத்தும் செயல்முறையுடனும் இந்த துறை முன்னேறுகிறது. திறன் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.

பாடசாலைகளிலோ பல்கலைக்கழகங்களோ பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கை அவசியம். தடைகளை குறைக்கும் பணியில் நாமும் ஈடுபட வேண்டும். இதற்காக பொறுப்பேற்பதும், கொள்கைகளை உருவாக்குவதும், திட்டங்களைத் தயாரிப்பதும், படிப்படியாக முன்னேறுவதும் அவசியம்.

திருமலை புத்தர் சிலை விவகாரம்; NPPயின் எதிர்ப்பினையும் மீறி தீர்மனம் நிறைவேற்றம்..!

0

திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இன விகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் வியாழக்கிழமை மாதாந்த அமர்வு நடைபெற்றது.

இவ் அமர்வில் தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களது இன விகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் அடையாளங்களினையும் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதாகத் தெரிவிக்கின்ற போதும் அது சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டதாகவும் ஒத்தோடுவதாகவுமே உள்ளது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தவிசாளரினால் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

மேலதிகமாக இவ் விடயம் தொடர்பில் அவசரத் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர் இ.கஜிபனினால் தவிசாளரிடம் கோரிக்கை ஒன்றும் சபையில் முன்வைக்கப்பட்து.

சபையின் இத் தீர்மானத்திற்கு தாம் ஒரு போதும் ஆதரவு அளிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்டாக தவிசாளருடன் வாதிட்டனர்.

பின்னர் இத் தீர்மானத்தில் அரசாங்கம் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை முன்னெடுக்கின்றது என்ற கருத்தினை நீக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பிரதேச சபைக்கு புத்தர் சிலை பற்றிய தீர்மானத்தினை முன் வைக்க முடியாது. இச்சபை அபிவிருத்திக்கான அலகு. ஆகவே வலிகாமம் கிழக்கிற்கு உட்பட்ட அபிவிருத்தி விடயங்களை மட்டுமே பார்க்க வேண்டிய சபை எதற்காக இங்கே புத்தர் சிலை பற்றி முன் வைக்கின்றீர்கள் எனவும் கடுமையாக தேசிய மக்கள் சக்தியினர் வாதிட்டனர்.

இந்நிலையில் பிரதேச சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் ஒருமித்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றக் கூடாது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த விகாரை விடயத்தில் நடந்து கொண்ட விடயத்தினை எதிர்த்தனர்.

வரலாற்று ரீதியில் மாறிமாறி வரும் அரசாங்கங்களின் இனவாத நீட்சியே நடக்கின்றது என சகல தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் வாதிட்டனர். இந் நிலையில் சபையில் அமளிதுமளி நீடித்தது.

சபையினை அமைதிப்படுத்திய தவிசாளர், பொலிசார் மீளவும் பேரினவாத நோக்கில் அமைக்கப்பட்ட பௌத்த சிலையை அகற்றிவிட்டு மீண்டும் பக்குவமாக அரசு நிறுவியது. இராணுவம் பாதுகாப்பளித்தது.

பாதுகாப்பு அமைச்சர் நாட்டின் மீயுயர் சபையில் தம்மால் மீள சிலை அகற்றப்படவில்லை எனவும் பாதுகாப்பிற்காகவே சிலை நகர்த்தப்பட்டதாகவும் மீள நிறுவப்படும் என அறிவித்தார்.

இவைகள் அரசாங்கத்தின் நடத்தைகள் கிடையாதா? கொள்கை கிடையாதா? தமிழ் மக்களை ஒடுக்கிவிட்டு சகித்துவாழக்கோருவதில் என்ன நியாயம் எனக்கேள்வி எழுப்பியதுடன் தேசிய மக்கள் சக்தி எதிர்த்தால் வாக்கெடுப்பின் ஊடாக தீர்மானம் பரிசீலிக்கப்படும் என்றார்.

இவ்விடயத்தில் அரசாங்கத்தினை குற்றஞ்சாட்டி முன்வைக்கப்படும் பிரேரணையினை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி தேசிய மக்கள் சக்தியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபையில் இருந்து அரசாங்கத்தினை நியாயப்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக தமது பலத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தியவாறு வெளிநடப்புச் செய்தனர்.

சபை ஆசனங்களில் இருந்து எழுந்து சென்று தமது எதிர்ப்பினை காட்டினர். இந் நிலையில் இப் பிரேரணையில் எவருக்காவது ஆட்சேபனைகள் உள்ளவா எனத் தவிசாளர் கேள்வி எழுப்பினார்.

பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் நடைபெற்றது தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஆக்கிரமிப்பு என பிரேரணையின் மீது கருத்துரைத்தனர்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரேரணையினை வலுப்படுத்தம் கவனயீர்ப்பு கருத்துக்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.

புதிய செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை ஆரம்பித்த ஐ.நா..!

0

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை செவ்வாயன்று (25) முறையாகத் தொடங்கியது.

2027 ஜனவரி 1 முதல் இந்தப் பொறுப்பை ஏற்க உறுப்பினர் நாடுகள் குறித்த பதவிக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு பேரவை, 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையின் தலைவரும் ஒரு கூட்டுக் கடிதத்தில் பரிந்துரைகளை அழைத்தனர்.

இது உலக அமைப்பின் தலைமை நிர்வாகியாக அன்டோனியோ குட்டெரெஸை மாற்றுவதற்கான போட்டியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு பேரவை, அடுத்த ஆண்டு இறுதியில் 10 ஆவது ஐ.நா. பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபைக்கு ஒரு வேட்பாளரை முறையாகப் பரிந்துரைக்கும்.

இந்தப் பதவிக்கு பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிஷேல் பச்லெட், கோஸ்டாரிகாவின் முன்னாள் துணைத் தலைவர் ரெபேக்கா கிரின்ஸ்பான் மற்றும் அர்ஜென்டினாவின் தூதர் ரஃபேல் க்ரோஸி ஆகியோர் அடங்குவர்.

இறுதியில், ஐந்து நிரந்தர வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பேரவை உறுப்பினர்கள் – அமெரிக்கா, ரஷ்யா,பிரித்தானிய, சீனா மற்றும் பிரான்ஸ் – ஒரு வேட்பாளரை ஒப்புக் கொள்ள வேண்டும்.

கொழும்பிலிருந்து யாழிற்கு மாசி சம்பல் போத்தலில் போதைப் பொருள்..!

0

கொழும்பிலிருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்து, விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூவர் யாழில் இன்று கைது செய்யப்பட்டனர்.

மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவரே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரை கடத்தல் மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாகக் கைதான மூன்று பேரும் யாழைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை இரண்டு கிராம் மற்றும் மூன்று கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் யாழில் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் கைதான 5 பேரையும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வங்கி அட்டை முறைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு..!

0

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பயண கட்டணத்தைச் செலுத்துவதற்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கி அட்டை முறைமைக்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

பேருந்து நடத்துனரின் கைகளில் வங்கி அட்டையைப் பயன்படுத்துவதற்கான இயந்திரம் இருக்கும் வரை குறித்த திட்டம் வெற்றிபெறாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தத் திட்டத்தை முறையாக செயற்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொருத்தமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை..!

0

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ,பயன்படுத்தவோ ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் அபாயங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

ஏற்கனவே டென்மார்க், நோர்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

இதேவளை இலங்கையிலும் 16 வயது வரைத் தடைகள் கொண்டு வரப்படும் பட்சத்தில் சமூகச் சீர்கேடுகள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்கள் பாரியவில் குறைவடையும்.

யாழில் காதலனின் தாயின் நகைளை திருடி ரிக்ரொக் பிரபலத்துடன் முதலீடு செய்த காதலி..!

0

சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் காதலி அண்மைய நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார்

இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட்ட 8பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக 17 திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய. போதை பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுளார்

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியினை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடைவு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழில் விற்பனை செய்துள்ளதாகவும் ரிக்ரொக் சமுக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவரையில் 27 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாக விசாரணையில் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

இதே போன்று இணையவழி மூலம் அண்மைய நாட்களில் வேறு சில சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்

எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பாடசாலை நேரம் நீடிப்பு; ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி -பிரதமர்

0

பாடசாலை நேரம் நீட்டிக்கப்பட்டவுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கும் ஆசிரியர்கள் அவர்களை மதிப்பீடு செய்வதற்கும் சிறந்த வகுப்பறை சூழல் வழங்கப்படும்.

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப இந்த நீடிப்பு செய்யப்படுவதாக அவர் கூறினார்.

மாணவியின் ஒன்றரைப் பவுன் தங்கச் சங்கிலியை மீள கையளித்த பொலிஸ் அதிகாரி..!

0

வவுனியா பொது வைத்திய சாலையில் காவல் கடமையில் இருந்த பொலிஸ் சர்ஜென்ட் 46674 திலகரதன என்ற அதிகாரி, இன்று (24/11/2025) வைத்திய சாலையை சுற்றிப் பார்வையிட்டிருந்த போது அவரால் தரையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் அந்த அதிகாரி இது குறித்து செவிலியர் குழுவினருக்கு அறிவித்ததுடன், குறித்த தங்கச் சங்கிலியை காவல் மையத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.

அதன் பின்னர், ஒரு பல்கலைக் கழக மாணவி தன் தாயாருடன் கண்ணீர் மல்க தன்னால் இழந்த தங்கச் சங்கிலியைத் தேடி வந்த போது, மருத்துவமனை காவல் மைய அதிகாரிகள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர் அந்த சங்கிலியை மீண்டும் அவருக்குக் கையளித்தனர்.

குறித்த முன்மாதிரியான செயற்பாட்டிற்கு எமது வாழ்த்துக்களை உளமாரத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

error: Content is protected !!