Sunday, July 19, 2026
Huis Blog Bladsy 118

யாழில் மருத்துவ பீட மாணவியுடன் வைத்தியர் தவறான தொடர்பு; காதலன் தற்கொலை முயற்சி..!

0

யாழில் மருத்துவபீட மாணவன் ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். தென்பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தனது வீட்டு மின் விசிறியில் கயிற்றை கட்டி துாக்கில் தொங்கிய வேளை மின் விசிறி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தை அடுத்து அவர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிய வருகின்றது.

தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவரது காதலியான மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின மாணவி யாழ் வைத்திய சாலையில் கடமையாற்றும் திருமணமான தமிழ் வைத்தியர் ஒருவருடன் தவறான தொடர்பைப் பேணுவதை அறிந்த பின்னரே அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த மாணவன் தனது காதலிக்கு அனுப்பிய வட்சப் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகள் போன்றவற்றை வைத்து மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டு மாணவியின் கள்ளக் காதலனான வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்து வருவதுடன் வைத்தியரின் மனைவியிடமும் குறித்த விடயம் தொடர்பில் முறையிடவுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக் காலத்தில் இத்தகைய முறை தவறிய உறவுகளால் உயிர்கள் வீணே இழக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது..!

0

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற் படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் இதுவரை 33 எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன..!

0

செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 26ஆம் திகதி ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(29) நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் போது புதைகுழி ஒன்றில் இருந்து மனித எலும்பு கூட்டு தொகுதிகளும், பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன .

இதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ். மாவட்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்.!

0

யாழ் மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலர் உட்பட சில பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறவுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இதன்படி யாழ்ப்பாணம் மேலதிக மாவட்ட செயலராகக் (காணி) கடமையாற்றிய ஸ்ரீமோகனன் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறீ மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளனர்.நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி. நிவேதிகா அஞ்சல் திணைக்களத்துக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.

வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் மேலதிக மாவட்ட செயலாளராகப் (நிர்வாகம்) பதவி உயர்வு பெறவுள்ளார். இதேவேளை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், பருத்தித்துறை பிரதேச செயலகங்களுக்குப் புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அனுர அரசாங்கத்தின் காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து..!

0

வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 3 மாத அவகாசத்துடன், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடை முறைப்படுத்துவதற்கு எதிராக, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவும் வழங்கியிருந்தது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் பிரகாரம் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறான பின்னணியிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் புதிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யப்பட்டதை தாம் வரவேற்கின்றபோது, இந்த வர்த்தமானி அறிவித்தல் போதுமான கால அவகாசம் வழங்குவதாகக் கூறி ரத்து செய்யப்படுவதையிட்டு அதிருப்தி அடைவதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரச அதிகாரிகள்; வடக்கிலும் சிலர்?

0

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச அதிகாரிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட விசாரணைக் குழுக்கள் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இதற்கிடையே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட உயர் அரச அதிகாரிகள் ஐந்து பேரளவில் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளையும், விசாரணைக் குழுக்கள் ஆராய்ந்து வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் தற்போதைக்கு முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

தன்பாலின சட்டம் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நீதி அமைச்சர்..!

0

தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.

தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு யோசனை தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ளது என்றும், அதனைப் பரிசீலிக்கும் நிலையில் இருப்பதாகவும் இலங்கைக்கான விஜயத்தின் போது ஊடக சந்திப்பில் பேசிய உயர்ஸ்தானிகர் கூறியிருந்தார். தாம் அதனை வரவேற்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட யோசனை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதுபற்றி எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் தலையீட்டினால் கல்வித் துறையில் ஏற்பட்ட சட்ட திருத்தங்களால் மாணவர் ஒழுக்கம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் கலசாராரத்தையும் சீரழிக்க எடுக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

புதுக்குடியிருப்பில் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞன் மற்றும் யுவதி கைது..!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் யுவதி ஒருவருமாக இருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலையை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் , யுவதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா மற்றும் போதைப்பொருளைக் கடத்திச்செல்வதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற வாகனம் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனைக்குட்படுத்தினர்.

அதன்போது 550 கிராம் கஞ்சா, 160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துவதற்குரிய பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அதனையடுத்து கஞ்சா மற்றும் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இளைஞர், யுவதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் போர் குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்க நிதியுதவி நிறுத்தப்படுமா?

0

இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.

தகவல் அறிந்த அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் அரச ஆவணங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும் 24 திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் உள்ள முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸின் தகவல்களுக்கு அமைய, இலங்கை, ஈராக், நேபாளம், பெலாரஸ், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சிரியா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகள் அந்த பரிந்துரை பட்டியலில் அடங்குகின்றன.

இருப்பினும் அமெரிக்க வெளிவிவகார துறையினரும், வெள்ளை மாளிகையின் முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகமும் இது தொடர்பில் பதில் எதனையும் வழங்கவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் குறித்த திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி தீர்மானமாக இதனை கருத முடியாது எனவும், இந்த விடயம் தொடர்பில் வெளியுறவுத்துறைக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி..!

0

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் சமீபத்திய நாட்களில் பரவி வரும் பல்வேறு செய்திகள் தவறானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21, 2025 வரை நிகழ்நிலையில் (Online) கோரப்படும் என்றும் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!