Saturday, May 2, 2026
Huis Blog Bladsy 66

மாணவியின் மார்பைத் தொட்ட விளையாட்டு ஆசிரியர் கைது..!

0

விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.



பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் சீரழியும் இளம் சமூகம்; நால்வர் போதைப் பொருட்களுடன் கைது..!

0

யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.



யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் வயோதிபர் எண்ணிக்கை..!

0

ஆசியப் பிராந்தியத்தில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டில் இலங்கையில் வயதான மக்கள் தொகை 12% ஆக இருந்தது என்றும், அது 2024 ஆம் ஆண்டில் 18% ஆக உயர்ந்துள்ளது என்றும் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் நிஷாணி உபயசேகர, குறிப்பிட்டார்.


சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் மேலும் கூறியதாவது,

“இலங்கையில், 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12% ஆக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், வயதான சமூகம் 18% ஆக உயர்ந்துள்ளது. 2040 ஆம் ஆண்டளவில் இந்த மக்கள் தொகையில் 25% பேர், அதாவது நான்கு பேரில் ஒருவர் வயதானவராக இருப்பார்கள் என்று நாங்கள் முன்னறிவித்துள்ளோம்.


ஆசியாவில் உள்ள ஒத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாக உள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்குக் பிறக்கும்போதே ஆயுட்கால எதிர்பார்ப்பு அதிகரித்ததும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதுமே முக்கிய காரணங்களாகும்.”என்றார்.

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட வவுனியா இளைஞர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது..!

0

வவுனியா – செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அந்த மூவரும், புதன்கிழமை (29) அன்று அதிகாலை 12.37 மணிக்கு இந்தியாவின் சென்னையில் இருந்து 6E-1175 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.



அவர்களில் ஒருவர் வவுனியா, செட்டிகுளம், காந்தி நகரில் வசிக்கும் 30 வயதுடையவர். மற்றை இருவரும் வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம், 3வது தொகுதி முகவரிகளில் வசிக்கும் 27 வயதுடையவர்கள்.



கைது செய்யப்பட்ட மூவரும் புதன்கிழமை (29) அன்று சுமார் 04.30 மணியளவில் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் பலத்த பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்திலிரந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.



அண்மையில் கிரிபத்கொட பகுதியில் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய மூவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், அங்கு கைது செய்யப்பட்டு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

ஆறு வயது சிறுமியை தொட்ட குதிரை கையாளுபவர் கைது..!

0

ஆறு வயது சிறுமி ஒருவரை தவறான முறைக்குட்படுத்திய வழக்கில் குதிரை கையாளுபவர் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆறு வயது சிறுமியை தகாத முறையில் தொட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குதிரை மற்றும் குதிரை கையாளுபவர் நேன்று (29.10.2025) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

முன்னதாக, பாதிக்கப்பட்டவரின் தந்தை கறுவாத்தோட்டம் பொலிஸாரில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.



இந்த முறைப்பாட்டின்படி, ஒக்டோபர் 26ஆம் திகதி, குறித்த தந்தை தனது இரண்டு மகள்களுடன் பொழுது போக்கிற்காக விகாரமஹா தேவி பூங்காவிற்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில், மகள்மார் மாறி மாறி ஒரு குதிரையில் சவாரி செய்தனர். இறுதிச் சுற்றில், சந்தேகநபர் சிறுமிகளில் ஒருவரை தவறான முறையில் தொட்டதாகக் கூறப்படுகிறது.



சம்பவத்தைக் கண்ட தந்தை உடனடியாக தனது மகளை அழைத்துச் சென்று பொலிஸில் முறையிட்டுள்ளார். இதனையடுத்தே, பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

எனினும், சந்தேகநபரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் செய்யவில்லை என்றும், சவாரியின் போது சிறுமி குதிரையிலிருந்து விழுவதைத் தடுக்க மட்டுமே அவரை தொட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேக நபரை தலா 200,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் செல்ல அனுமதித்துள்ளார்.

பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு..!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளின் விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் இராணுவத்தினர் கையளித்தனர். இந்த நிகழ்வு இன்று (29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.



குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

0

யாழ் – பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) நடைபெற்றது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யாகொந்த உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

காணிகளை மீளக் கையளிக்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள செயற்பாட்டு மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்ப்பதில் இந்தக் கலந்துரையாடலின் பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



அத்துடன், இன்னும் இராணுவத்தின் வசம் உள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவதற்காக, அந்த இராணுவப் பிரிவுகளை கட்டம் கட்டமாக அகற்றுவது குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

அதன்படி, சிவில் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும், அத்தியாவசிய பாதுகாப்புப் பிரிவுகளைத் தொடர்ந்து பேணி, பிரதேசத்தின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், புதிய எல்லைகளை நிறுவுவதை நிறைவு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.



இந்தச் செயல்முறை வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்புடன் முழுமையாகப் பொருந்திப் போக வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை; 64 பேர் உயிரிழப்பு..!

0

போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.



இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது.



பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது.



குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு..!

0

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யூனியன் குளம் பகுதியை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்கு பயணமாக இருந்த நிலையில் , ஐந்து தினங்களுக்கு முன்னரான 19ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.



காணாமல் போன மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராஜன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞனை தேடி வந்தனர்



இந்நிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வந்த அக்கராஜன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்; விடுக்கப்பட்ட உத்தரவு..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வில், அரசு பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




வழக்கு ஒத்திவைப்பை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!